அடுத்து விவாகரத்துக்கு தயாரான ஸ்டார் ஜோடிகள்.. தந்தையிடம் கதறிய மகன்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..!

மற்ற சினிமாக்களில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவை பொருத்தவரை வருடா வருடம் ஜோடிகளுக்கு விவாகரத்து என்பது சகஜமாக நடக்க துவங்கியிருக்கிறது. பெரும்பான்மையான நடிகர்களும் நடிகைகளும் சேர்ந்து வாழாமல் பிரிந்து கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து இப்பொழுது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் மற்ற நடிகர்களை போல் இல்லாமல் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பெரிதாக கிசுகிசுக்களில் கூட வராத ஒரு நபர் ஆவார்.

விவாகரத்துக்கு தயாரான ஸ்டார் ஜோடிகள்

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக்கூடியவர் ஜெயம் ரவி அப்படிப்பட்ட ஜெயம் ரவி சேர்ந்து வாழாமல் இப்படி விவாகரத்துக்கு முன் வந்திருக்கிறாரே? என்று அனைவரும் இதுக்குறித்து அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த ஒரு ஜோடியும் விவாகரத்துக்கு தயாராகி வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. அது வேறு யாருமில்லை நடிகை ஜோதிகாவும் சூர்யாவும் தான். நடிகை ஜோதிகா கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தனது தாய் தந்தையை பார்த்துக் கொள்ளவும், தனது குழந்தைகளின் கல்விக்காகவும் மும்பை செல்வதாக கூறி மும்பையிலேயே ஒரு வீடு வாங்கி அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் அது எல்லாம் ஒரு காரணம்தான் என்று கூறப்படுகிறது ஏனெனில் வெகு காலங்களாகவே பாலிவுட்டில் பிரபலமாக வேண்டும் என்பது ஜோதிகாவின் ஆசையாக இருந்தது என்று கூறப்படுகிறது. அதற்கு தகுந்தாற் போல் மும்பை சென்ற பிறகு ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் சினிமாக்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

தந்தையிடம் கதறிய மகன்

ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து அவை திரையிலும் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் மும்பையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவிற்கு மிக கவர்ச்சியாக வந்திருந்தார் நடிகை ஜோதிகா. இது எதுவுமே நடிகர் சூர்யாவிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முக்கியமாக அவர் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று சூர்யாவே கூறியிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜோதிகா பாலிவுட்டில் நிறைய நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் தற்சமயம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு

இந்த செய்தியை கேட்டது முதலே சூர்யா மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது தந்தை சிவகுமாரிடம் வந்து புலம்பியதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே இவர்கள் இருவரும் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஜோதிகா ஏதாவது ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நெருக்கமாக நடித்து அது வெளியாகும் பட்சத்தில் இவர்களுக்கு விவாகரத்தும் உறுதியாகிவிடும் என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கின்றன ஆனால் இது குறித்து இந்த தம்பதிகள் எந்த ஒரு அதிகார தகவல்களையும் இதுவரை கொடுக்கவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version