நடிகர் சூர்யாவின் மீது கடந்த சில நாட்களாகவே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் மும்பையில் செட்டில் ஆன விஷயம் ஒரு மிகப்பெரிய பேசும் பொருளாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து கண் பட்டது போல கங்குவா ஷூட்டிங்கில் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது. அடுத்து பருத்திவீரன் சர்ச்சை என சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவின் குடும்பம் பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் வெளி வந்து பெரியவர் சிவகுமார் பெயரும் டேமேஜ் ஆகும் படி மாறிவிட்டது.
இதனை அடுத்து தற்போது நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமான நபர் ஒருவர் நடிகர் சூர்யாவை ஏமாற்றி இருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யாவின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் அந்த முக்கிய நபர் என்ற விஷயம் உங்களுக்கு தெரிந்தால் கண்டிப்பாக அதிர்ச்சி ஏற்படும்.
அந்த நபர் நடிகர் சூர்யாவிற்கு பல வருடங்களாக பர்சனல் மேனேஜராக இருந்த தங்கதுரை. சூர்யாவின் வெற்றிகளில் இவருக்குத்தான் அதிக பங்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அண்மைக்காலமாக சூர்யாவின் குடும்பத்தை பற்றி தவறான விஷயங்களை இந்த மேனேஜர் வெளியே தெரிவித்ததால் தான் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது.
மேலும் சூர்யா அதிகளவு நம்பிக்கை வைத்திருந்த தங்கதுரை இதை செய்வாரா? என்று சூர்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் நடிகர் சூர்யா இருந்திருக்கிறார்.
மேலும் சூர்யாவின் மேனேஜர் சொல்லுவது கண்டிப்பாக உண்மையாகத்தான் இருக்கும் என மற்றவர்கள் கருதுவார்கள். எனவே இனி தங்கதுரையை தங்களுக்கு துணையாக வைத்துக் கொண்டால் பேராபத்தில் அது முடியும் என கருதி போதுமடா சாமி என்று அவரை வெளியேற்றி விட்டார்கள்.
இந்த தங்கத்துரை தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நபர். இயக்குனர் சங்கர், அவர் மகள் அதிதி சங்கர், தமன்னா, காஜல் அகர்வால் போன்றவர்களுக்கு மேனேஜராக இருந்திருக்கிறார்.
எனவே இதுவரை முக்கிய பொறுப்பில் இருந்த இந்த தங்கதுரையை தூக்கி விட்டு சூர்யா தன்னுடைய கல்லூரி கால நண்பர் ஒருவரை தனக்கு மேனேஜராக நியமித்து விட்டார் என்ற செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.