சிவக்குமார் சூரியாவை பிரித்த ஜோதிகா.. இதனால் தான் மும்பையில் செட்டில் ஆனாராம்.. பகீர் கிளப்பிய நடிகர்..

தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்பட்டவர் நடிகர் சிவக்குமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்து, தமிழ் சினிமாவில் இருப்பவர். மூன்று தலைமுறை கண்ட சீனியர் நடிகர்.

அவரது மூத்த மகன் சூர்யா, மருமகள் ஜோதிகா, இளைய மகன் கார்த்தி என மூன்று பேருமே நடிப்புத்துறையில் இப்பவர்கள். சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக, முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள்.

பருத்திவீரன்

இயக்குநர் அமீர் இயக்கத்தில், பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டில் அறிமுகமானார் கார்த்தி. இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இதில் அவரது 25வது படமான ஜப்பான் படம் சரியாக ஓடவில்லை.

எனினும் இப்போது மெய்யழகன், வா வாத்தியாரே என்ற இரண்டு படங்களில் கார்த்தி நடித்து வருகிறார்.

கங்குவா

நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில், கங்குவா படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று உறுதியான நிலையில், சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்கிறது. அதுதவிர இந்தி படம் ஒன்றிலும் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்: நைட் பார்ட்டி.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி.. வைரல் வீடியோ..

இந்நிலையில், சிவக்குமாரையும் சூர்யாவையும் ஜோதிகா பிரித்துவிட்டார் என்று வீடியோ ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, தமிழ் நடிகர்களின் மிகவும் பெருமை வாய்ந்த நடிகர் சிவக்குமார். சினிமா நடிகராக இருந்தும் மது, புகை பழக்கம் இல்லாதவர். எந்த நடிகையுடனும் கிசுகிசுவில் சிக்காதவர். மிக நல்ல ஒழுக்கசீலராக வாழ்ந்தவர்.

சிவக்குமார்

யோகா தியானம் என்று உடல்நலத்தை கட்டுக்கோப்பில் வைத்திருப்பவர். அபார நினைவாற்றல் கொண்டவர். சிறந்த ஓவியர். நல்ல கருத்துகளை பேசும் பேச்சாற்றல் மிக்கவர்.

இதையும் படியுங்கள்: நடிகர் பிரபுவுடன் நிற்கும் இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுதா.. தற்போது பிரபல நடிகர்..

ஆனால் சமீபகாலமாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். செல்பி எடுத்தவரின் மொபைல் போனை தட்டி விட்டது, சால்வையை பிடுங்கி எறிந்தது என இப்படி அடிக்கடி ஏதேனும் பிரச்னையை பொது இடங்களில் செய்து விடுகிறார்.

ஜோதிகா

ஆனால் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வந்தது போல, சிவக்குமார் வீட்டிலும் குடும்ப உறவுகளுக்குள் விரிசல் வந்துவிட்டது. அதனால்தான், சிவக்குமார், சூர்யாவை பிரித்து விட்டார். மும்பையில் குடும்பத்துடன் சென்றுவிட்டார் ஜோதிகா. இனிமேல் எட்டி இருந்தால்தான் மரியாதை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது, என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version