சூர்யாவா இருந்தா என்ன..? கேட்டதை வைங்க.. ராஷ்மிகா போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. அடி ஆத்தி..

சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கொஞ்சம் அறிமுகம் ஆகி விட்டாலே சில நடிகர், நடிகைகளுக்கு தலையில் கொம்பும், இடுப்புக்கு பின்னால் பெரிய வாலும் முளைத்து விடுகிறது.

அடுத்தடுத்த சில படங்களில் வாய்ப்பு கிடைக்கா விட்டால், அந்த வாலை சுருட்டிக் கொண்டு மூலையில் சென்று அமர வேண்டும் என்பதையே மறந்து விடுகின்றனர்.

ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்து அல்லி அர்ஜூன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து, சகல தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து தமிழில் சுல்தான் என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

பட்டு கம்பளம் விரித்து..

இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், ராஷ்மிகா மந்தனா இந்தி பக்கம் ஒதுங்கினார்.

எந்தளவுக்கு வேண்டுமானாலும் தாராள கவர்ச்சி காட்டுகிறேன் என்று வரும் நடிகைக்கு பாலிவுட் திரையுலகம் பட்டு கம்பளம் விரித்து வரவேற்கும். அந்த வகையில் தமன்னா பாணியில், ராஷ்மிகா மந்தனாவும் களத்தில் இறங்கினார்.

இதையும் படியுங்கள்: இனிமே கல்யாணத்தை பத்தி கேள்வி கேப்பீங்க.. சிம்புவின் வீடியோவை பகிர்ந்த பிரேம்ஜி..!

அதீத கவர்ச்சியில்…

அனிமல் என்ற படத்தில் அதீத கவர்ச்சியில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் பகல் நேர தூக்கத்தையும் கெடுத்தார்.

இந்த படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் 900 கோடி ரூபாய் வரை வசூலித்ததால், நிலவரம் புரியாத அளவுக்கு கலவரமாய் தனது சம்பளத்தை ராஷ்மிகா மந்தனா உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

நேஷனல் கிரஷ்

நேஷனல் கிரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கு அடுத்தடுத்து இந்தியில் பட வாய்ப்புகள் குவியவில்லை என்றாலும், அவர் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இதற்கிடையே நிறைய விளம்பர படங்களில் நடிக்கிற வகையில், பெரிய அளவில் வருமானத்தை ஈட்டி வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

சூர்யாவுக்கு ஜோடியாக..

இந்த சூழலில் கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, சுதா கொங்காரா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு புறநானூறு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, ராஷ்மிகா மந்தனாவை அணுகியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: தொப்புளில் சம்பவம் செய்ய முயற்சித்த இயக்குனர்.. மறுத்த கேத்ரீன் தெரேசா.. அலசி ஆராய்ந்த பிரபல நடிகர்..

இந்த படத்தில் நடிக்க தனக்கு சம்பளமாக ரூ. 3 கோடி வேண்டும். அதில் இருந்து ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டேன் என்று கறாராக பேசியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

நீங்கள் நடிக்க போவது, தமிழில் டாப் ஸ்டார் நடிகரான சூர்யாவுடன். அந்த படத்தில் அவருடன் நடித்தால் உங்கள் மார்க்கெட் ரேட் வேற லெவலில் போய்விடும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

யாரா இருந்தா எனக்கென்ன…

சூர்யாவா இருந்தா என்ன..? யாரா இருந்தா எனக்கென்ன, கேட்டதை சம்பளத்தை வைங்க..என்று ராஷ்மிகா மந்தனா போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டரை பார்த்து, அடி ஆத்தி.. என அலறியடித்து அங்கிருந்து ஓடி வந்திருக்கிறது புறநானூறு படக்குழு.

சம்பளத்தை மட்டுமே லட்சியமாக வெச்சு நடிக்கிற இந்த ராஷ்மிகா மந்தனா, சினிமா உலகில் ரொம்ப நாள் தாக்குபிடிக்கறது கஷ்டம்தான் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version