தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி ஏகப்பட்ட பெண் ரசிகைகளை தன்வசப்படுத்தியவர் நடிகர் மாதவன்.
இவரது நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மின்னலே. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.
இதையும் படியுங்கள்: ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
மின்னலே திரைப்படம்:
இந்த படத்தில் மாதவனுடன் அப்பாஸ் ரீமாசென் விவேக் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
மின்னே படத்தின் மூலம் தான் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே கௌதம் மேனனின் திறமை புகழ்ந்து பாராட்டப்பட்டது. வணிக ரீதியாகவும் வெற்றியை குவித்ததால் கௌதம் பிரபலமாக பேசப்பட்டார்.
இப்படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார். அப்போதே வணிகரீதியாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற மின்னலே திரைப்படம் ஹிந்தியில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
அங்கும் கதாநாயகனாக மாதவனே நடித்திருந்தார். அங்கும் இந்த படம் வேற லெவல் ஹிட் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும் இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.
வாய்ப்பை தவறவிட்ட சூர்யா:
அதாவது மின்னலே திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது மாதவன் கிடையாதாம். இந்த கதையை சூர்யாவிற்காக பண்ணலாம் என முடிவு செய்தாராம்.
சூர்யாவின் தந்தை சிவகுமாரிடம் மின்னலே படத்தின் கதையை கூறியுள்ளார் கவுதம் மேனன். ஆனால், அந்த கதையை சிவகுமார் நிராகரித்துவிட்டாராம்.
இதையும் படியுங்கள்:நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!
The Actor, Surya presenting the award for the Best Film to the Director, Mr. Alejandro Landes and the Producer, Mr. Franciso Aliure for the film Porfirio at the closing ceremony of the 42nd International Film Festival of India (IFFI-2011), at Panaji, Goa on December 03, 2011.அதன்பின் தான் மின்னலே கதை மாதவனிடம் கூறினாராம் கவுதம். முதல் படத்தில் சூர்யாவுடன் இணைய முடியவில்லை என்றாலும்…
காக்க காக்க,வாரணம் ஆயிரம் என தொடர்ந்து அவருடன் பணியாற்றினார் கவுதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.