கள்ளச்சாராய மரணங்கள்..! விஜய்யை தொடர்ந்து அரசை போட்டு தாக்கிய நடிகர் சூரியா..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த வருடம் ஜனவரி மாதம்தான் விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரது கட்சியின் பெயரையும் அறிவித்தார்.

அவரது கட்சியின் கொடி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து அதனால் மாபெரும் உயிர்சேதம் ஏற்பட்டது.

45க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல அரசியல் தலைவர்கள் இதை நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.

களத்தில் இறங்கிய விஜய்:

நடிகர் விஜய்யும் கூட நேரில் சென்று பார்த்து வருகிறார். ஆனால் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி வருபவராக நடிகர் சூர்யா இருந்து வருகிறார். அடிக்கடி பிரதமர் மோடியை குறித்து விமர்சனம் அளித்திருக்கிறார் சூர்யா.

புதிய கல்வி கொள்கை வெளியான போது கூட அது குறித்து சூர்யா காட்டமான பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இப்படி ஒரு பிரச்சனை நடந்திருக்கும் பொழுது இதற்கு மூன்று நாளாகியும் சூர்யா எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருக்கிறார் என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா இது குறித்து குரல் கொடுத்து இருக்கிறார். நடிகர் விஜய் போலவே இவரும் அரசை கண்டித்து பேசி தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் சூர்யா கூறும் பொழுது புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் கூட ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் நடக்காது.

சூர்யா கொடுத்த பதிலடி:

ஆனால் இப்படி விஷ சாராயத்தால் நடந்திருப்பது அச்சமூட்டுவதாக இருக்கிறது. இதேபோல கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததால் 22 பேர் பலியானார்கள். அப்பொழுது அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

ஆனால் அதே சம்பவம் இப்பொழுது பக்கத்து மாவட்டத்தில் நடந்திருக்கிறது. அதே மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து இப்பொழுது மக்கள் கொத்துக்கொத்தாக இறந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது வரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று வெளிப்படையாக கூறி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் சூர்யா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam