கங்குவா சிங்கிள்.. விதவிதமாக வச்சி செய்யும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் வீடியோக்கள்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூர்யா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.இவர் நடிகர் சிவகுமாரின் மகனாகிய சூர்யாவின் இயற்பெயர் சரவணன் என்பதாகும்.

தமிழ் திரைப்படங்களின் நடிப்பதற்காக சூர்யா என்று பெயர் மாற்றம் செய்து கொண்ட இவர் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார்.

கங்குவா சிங்கிள்..

இவர் நடிப்பில் வெளி வந்த பிதாமகன் திரைப்படமானது இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்ததை அடுத்து பல படங்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய இவர் தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இவரோடு இணைந்து திஷா பதானி, நடராஜ் சுப்பிரமணியம், கஜபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

https://x.com/AK_Vinit/status/1815706342746726871

இந்த படத்தின் வெளியீடு பற்றி 2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. எனினும் covid-19 தொற்று காரணமாக கிடப்பில் போடப்பட்டது. மேலும் 2012 ஆம் ஆண்டு சூர்யா 42 என்ற வகையில் மீண்டும் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 இல் முடிவடைந்து விட்டது.

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது வரும் அக்டோபர் 10ஆம் தேதி அன்று வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வித விதமாய் வச்சு செய்யும் ரசிகர்கள்..

இந்நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் இந்த படம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல வரவேற்பை பெற்றது.

உலகளாவில் வெளிவரக்கூடிய இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சூர்யாவின் 49 வது பிறந்தநாள் அன்று படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக இந்த நிகழ்வை மாற்றிவிட்டார்கள்.

https://x.com/Kumaran0115/status/1815797331570110828

அது மட்டுமல்லாமல் ஸ்ரீதேவி பிரசாத் இசையில் ஃபயர் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஆடி மாசத்தை வைத்து இணையத்தில் சிலர் இந்த பாடல் குறித்த சில மீம்ஸ்களை வெளியிட்டு வைத்து செய்து இருக்கிறார்கள்.

தீயாய் பரவும் வீடியோக்கள்..

இதனை அடுத்து இந்த வீடியோக்கள் இணையங்களில் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இப்படி வெளி வந்து இருக்கக்கூடிய வீடியோக்களை பார்த்த இணையதள வாசிகள் எப்படியெல்லாம் கலாய்த்து தள்ளுவது என்ற கேள்வியை வைத்திருப்பதோடு ஆடி மாசத்திற்கு ஏற்றபடி இந்த பாடலை மாற்றி இருப்பதை பற்றி நினைத்து வியந்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த மீம்சை பார்க்க வேண்டும் என்றால் கொடுக்கப்பட்டிருக்கின்ற லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது.

https://x.com/JDKaranLeo/status/1815644919416975610

இந்த கிரியேட்டிவ் மீம்சை உருவாக்கிய மூளைகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள் என்பதை கூட நீங்கள் கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம்.

மேலும் இந்த படம் எப்போது வெளி வரும் என்று ஆவலில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். மேலும் இந்த பாட்டானது ஒரு சுவாமி பாட்டு போல இருப்பதாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version