தமிழ் திரையுலகில் வந்த வேகத்திற்கு வரவேற்பை பெற்றவர் நடிகர் ஜெயம் ரவி. அவர் நடித்த முதல் திரைப்படமான ஜெயம் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.
பிறகு ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை கொடுக்கும் படங்களாகவே இருந்து வருகின்றன. அதற்கு பிறகு ஜெயம்ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம், சம்திங் சம்திங், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற திரைப்படங்கள் பலவும் வெற்றி படங்களாகவே அமைந்தன.
விவாகரத்து பிரச்சனை:
அதற்கு பிறகு ஜெயம் ரவி இப்போது நடித்து வரும் திரைப்படங்கள்தான் அதிகமாக தோல்வியை கண்டு வருகின்றன. இதற்கு நடுவே ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து ஆகப் போகிறது என்கிற பேச்சுதான் தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரிய பேச்சாக சென்று கொண்டுள்ளது.
கடந்த ஒரு வார காலமாகவே இவர்கள் இருவரும் பிரிய போகிறார்கள் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார்.
எனவே கண்டிப்பாக இவர்கள் இருவரும் பிரிய போகிறார்கள் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்கிற கேள்வி இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் போது அதில் நடித்த ஒரு நடிகையுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர்கள் இருவரும் பிரிய போவதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
இதுதான் காரணமா?
இன்னொரு பக்கம் ஆர்த்தியின் அம்மாதான் ஜெயம் ரவியின் திரைப்படங்களை எல்லாம் தயாரித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக ஜெயம் ரவியின் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை காண்பதால் அவருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதுவே தற்சமயம் மனைவியுடனும் பிரச்சனை ஆகி இருவரும் பிரிய போகிறார்கள் என்று பேச்சுக்குள் இருக்கின்றன. இதற்கு நடுவே பாடகி சுசித்ரா ஜெயம் ரவி விவாகரத்து குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறும்பொழுது ஆர்த்தி அதிக பணக்கார வாழ்க்கையை விரும்புபவர் Louis Vuitton என்கிற பெரும் நிறுவனத்தின் தயாரிப்புகளைதான் ஆர்த்தி எப்போதும் பயன்படுத்துவார். அந்த அளவிற்கு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் ஆர்த்தி.
அந்த நிறுவனத்திலேயே சோப்பு தயாரிக்க சொல்லுங்கள் அதில் தான் நான் குளிப்பேன் என்று அவர் ஜெயம் ரவியிடம் கூறி வருகிறாராம். அந்த அளவிற்கு சொகுசு வாழ்க்கையை எதிர்பார்ப்பவர் என்பதால் பொறுத்து பொறுத்து பார்த்த ஜெயம்ரவி தற்சமயம் அவரை வீட்டுப் பிரிய முடிவு செய்து இருக்கிறார். ஜெயம் ரவியின் இந்த முடிவு நல்ல முடிவு என்றுதான் கூறுவேன் என்று சுசித்ரா கூறியிருக்கிறார்.