நடிகை சுவலட்சுமி இப்போது எப்படி இருக்கிறார்..? – அவருடைய கணவர் யாருன்னு தெரியுமா..?

 தல அஜித்தின் திரைப்பட வாழ்க்கையில்  ஆசை திரைப்படம் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சுவலட்சுமி. இந்தப் படமானது 1995இல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்தினத்தின் தயாரிப்பில் வெளிவந்தது.

 எனவே தான் இவர் ஆசைநாயகி சுவலட்சுமி என்று அழைக்கப்பட்டார். அழகு கவர்ச்சி காட்ட விரும்பாத இவர் குடும்ப பாங்கான கேரக்டர்களில் மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார்.

 அந்த வரிசையில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து லவ் டுடே நிலாவே வா போன்ற படங்களில் நடித்து இவரது நடிப்பு திறன் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

 இதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் சீரியலில்  நடிக்கத் துவங்கினார் இவர் சூலம் என்ற சீரியலில் மிகச் சிறப்பான முறையில் இவரது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.

மேலும்  நீண்ட இடைவெளி சினிமாத்துறையில் இவருக்கு ஏற்பட்ட போதிலும் இவரை சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடிக்க வைப்பதற்காக இயக்குனர் மோகன் ராஜா எவ்வளவோ முறை கேட்டபோதும் அவர் நடிப்பதற்கு மறுத்துவிட்டார்.

 அதற்கான காரணங்கள் என்ன என்பது இதுவரை தெரியாமல் மிக ரகசியமாகவே உள்ளது.இதன் பின்னர் இவர் 2002 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளரான swagato பானர்ஜி  என்பவரை திருமணம் செய்துகொண்டு சான்பிரான்சிஸ்கோவில் குடியேறிவிட்டார்.

 இந்நிலையில் அவர் தற்போது தன் கணவரோடு இருக்கும் புகைப்படத்தை தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து அனைவரும் சுவலட்சுமியின் கணவரா? இவர் பார்ப்பதற்கு ஆளே மாறிவிட்டாரே என்பது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் சுவலட்சுமியின் ரசிகர்கள் அனைவரும் இந்தப் புகைப்படத்தை ஆச்சரியத்தோடு பார்த்து வருவதோடு சினிமா வாழ்வில் தான் உங்களை பார்க்க முடியவில்லை எனினும் திருமண வாழ்வில் நீங்கள் வெற்றியடைந்து இருக்கிறீர்கள் என்பது எந்த படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது.மேலும் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …