“ஸ்வீட்டான சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுங்க..! – சீக்கிரமே உடல் எடையை குறையுங்க..!!

 கிழங்கு வகைகளிலேயே அதிக நன்மைகளை தரக்கூடிய கிழங்கு எது என்றால் நீங்கள் யோசிக்காமல் சொல்லலாம் சர்க்கரை வள்ளி கிழங்கு என்று. இப்படிப்பட்ட இந்த சக்கரவல்லி கிழங்கு சுவையில் மட்டுமல்ல அது இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் மனிதர்களுக்கு நன்மையை அளிக்கிறது.

குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன் எனப்படும் தாவரக் கலவை அதிக அளவு உள்ளது. இது மனித உடலுக்கு தேவையான அற்புதமான ஆற்றல்களை கொடுக்கிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்கும் இளைய தலைமுறை கண்டிப்பாக தங்களது உணவில் உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்கரைவள்ளி கிழங்கை அதிகமாக பயன்படுத்தும் போது உடல் எடை குறைப்பு ஏற்படும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

 இந்த சர்க்கரை வள்ளி கிழங்குக்கு உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றக் கூடிய திறன் இருப்பதாலும் நார்சத்து மிகுந்திருப்பதாலும் உங்கள் எடை விரைவில் குறையும்.

 130 கிராம் சர்க்கரை வள்ளி கிழங்கு சுமார் நான்கு கிராம் அளவு நார்சத்து இருப்பதால் இந்த டயட்டரி ஃபைபர் உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து விடுவதால் விரைவில் உங்கள் அடிவயிற்றில் கொழுப்பு கரைவதோடு மட்டுமல்லாமல் எடை குறைப்பும் ஏற்படுகிறது.

 மேலும் பசி உணர்வை இது ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்துவதால் அதிகம் நம்மால் சாப்பிட முடியாது. எனவே விரைவில் எடையை குறைக்க முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த சர்க்கரவள்ளி கிழங்கு ஆனது கிளைசெமிக் குறியீட்டை குறைவாகக் கொண்டு இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 சர்க்கரை வள்ளி கிழங்கை உட்கொள்வதின் மூலம் உங்களது செல்களுக்கு தேவையான நீரேற்றம் கிடைப்பதால் வளர்ச்சிதை மாற்றம் உடலில் சிறப்பாக நடைபெற உதவி செய்கிறது.

 அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் பி சத்தானது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவான இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை இருக்கிறது.

 இதயப் பிரச்சனையை குறைக்கிறது உடல் பருமனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவி செய்கிறது. எனவே எங்கு சர்க்கரைவள்ளி கிழங்கு கிடைத்தாலும் கட்டாயம் நீங்கள் அதை எந்த நேரத்திலும் எந்த நாளிலும் சாப்பிடலாம் என்பதை மறந்து விடாமல் வாங்கிப் புசியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …