பெற்ற மகன் முன்பு திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை..! லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் பிறந்த குழந்தை..!

தற்போதைய காலகட்டங்களில் பொதுமக்கள் மத்தியிலேயே திருமணத்திற்கு முன்பான உறவு என்பது சாதாரணமாகி வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் மத்தியில் அதைப் பற்றி சொல்லவே வேண்டாம். பெரும்பாலான பிரபலங்கள் முதலில் உறவு வைத்துக் கொண்டு பிறகுதான் திருமணம் செய்து கொள்கின்றனர்.

அப்படியாக திருமணத்திற்கு முன்பே உறவில் இருந்த ஒரு சீரியல் நடிகை பற்றிய செய்திதான் சமீபத்தில் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அண்ணாமலை என்கிற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா பாரதி.

சின்னத்திரையின் மீது வெகு நாட்களாகவே ஈடுபாடு இருந்து வந்த நிலையில் தொடர்ந்து அதற்கு முயற்சிகளை செய்து வந்தார். அந்த நிலையில்தான் அவருக்கு அண்ணாமலை சீரியலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சீரியல் எண்ட்ரி:

அண்ணாமலை சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது பொதுவாக முதல் சீரியலே எல்லோருக்கும் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுக்காது. ஆனால் இவருக்கு அது நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து வம்சம், மலர்கள் உள்ளிட்ட சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பல நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் அப்பொழுது மானாட மயிலாட என்கிற நிகழ்ச்சியை துவங்கினார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சிக்கு எதிராக மானாட மயிலாட நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அது நல்ல வரவேற்பு பெற்று நிறைய சீசன்கள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்தன. அதற்கு பிறகு ஜீ தமிழில் சூப்பர் மாம் என்கிற நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து கொண்டார்.

இது இல்லாமல் ஜீ தமிழில் மிகவும் பிரபலமான சீரியலான ரோஜா மற்றும் செம்பருத்தி சீரியல்களில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து அதிக வரவேற்பு பெற்றார் ஸ்வேதா பாரதி.

காதல் வாழ்க்கை:

கிட்டத்தட்ட ஸ்வேதா பாரதி அளவிற்கு பல வருடங்கள் தமிழ் தொலைக்காட்சி துறையில் இருந்து வரும் நடிகைகள் மிக குறைவானவர்களே. இந்த நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார் ஸ்வேதா.

அவருடைய பெற்றோரையும் மீறி தான் இயக்குனர் தமிழ் அவர்களை காதலித்து வந்திருக்கிறார் ஸ்வேதா பாரதி. ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் பல வருடங்கள் இருந்திருக்கிறார். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

குழந்தை பிறந்த பிறகு வழக்கம் போல இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டு அதன் பின் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அவரது மகன் இவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து இருக்கிறார்.

அப்போது வந்தவர்களிடம் மகனை தனது சகோதரியின் மகன் என்று கூறி அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஸ்வேதா பாரதி. இப்படி மகன் முன்பே திருமணம் நடக்கும் கூத்துக்கள் அப்பொழுது லிவிங் ரிலேஷன்ஷிப் காரணமாக நடந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version