“எப்படி வர்ணிக்குறதுன்னே தெரியலயே…” – நீச்சல் உடையில்.. இணையத்தை தெறிக்க விடும் ஸ்வேதா மேனன்..!

தமிழில் நான் அவன் இல்லை, அரவான், துணை முதல்வர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இயக்குனர் ஜெயபாரதி இயக்கியிருந்த ரதிநிர்வேதம் என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து இருந்தார்.

மலையாளம் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இவர் நடித்திருக்கிறார். முதலில் பாபி போன்ஸ்லே என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணமான சில மாதங்களில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து சுதந்திர பறவையாக சுற்றி வந்த நடிகை ஸ்வேதா மேனன் திரைப்படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று நீச்சலுடையில் கூட சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீவல்சன் மேனன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சபைனா என்ற ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்து இருக்கின்றது.

பொதுவாக நடிகைகள் விவாகரத்து செய்தால் அது மிகப்பெரிய செய்தியாவது வாடிக்கை. அதேபோலத்தான் இவருடைய விவாகரத்து செய்தியும் ரசிகர்களை அதிர வைத்தது. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பதிவு செய்து இருக்கிறார் நடிகை ஸ்வேதா மேனன்.

அவர் கூறியதாவது நான் முதலில் பாபி போன்ஸ்லே-வை திருமணம் செய்தது என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. யாருக்கும் இது போல் நடக்கக்கூடாது. சினிமா மற்றும் மாடலிங் தொழிலுக்காக மும்பையில் இருந்தேன்.

பெற்றோர்கள் என்னை நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்காமல் சுதந்திரமாக இருக்க விட்டனர். கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் தான் நான் வளர்ந்தேன். ஆனால், அதனை பாபி தவறாக பயன்படுத்தினார்.

மும்பையில் நான் தங்கியிருந்த பொழுது தனியாகத்தான் அதிக நேரம் இருப்பேன். இந்த தனிமை தான் பாபி மீது எனக்கு காதல் வர காரணமாக அமைந்து விட்டது. இந்த திருமணத்தில் என்னுடைய அப்பாவுக்கு விருப்பமில்லை.

ஆனால் நான் தான் அடம்பிடித்து அவரை திருமணம் செய்தேன். இதை நினைத்து நிச்சயம் வருத்தப்படுவாய் என்று அப்பா சொன்னார். அவர் சொன்னது போலவே நடந்தது.

தற்போது என்னுடைய குடும்பத்தாரின் அனுமதியுடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய இரண்டாவது கணவரையும் நான் விவாகரத்து செய்யப் போகிறேன் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

ஆனால் அது உண்மை கிடையாது இப்படியான வதந்திகளை பார்க்கும் போது எங்கள் இருவருக்கும் சிரிப்பு தான் வருகிறது என்று கூறியிருந்தார். தன்னுடைய இளம் வயதில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam