சிண்டு முடிய நினைத்த நெட்டிசன்.. சம்பவ இடத்திலேயே வச்சி செய்த சீரியல் நடிகைகள்.. இந்த கூத்தை பாருங்க..!

பிரபல சீரியல் நடிகையான சியமாந்தா கிரண் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து ஈரமான ரோஜாவே, நிலா உள்ளிட்ட பல தொடர்களில் இவர் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.

சீரியல் நடிகைகள் சியமாந்தா கிரண் – பவித்ரா ஜனனி:

இவரை சமூக வலைதளங்களை ஃபாலோ பண்ணும் ரசிகர்கள் கூட்டமும் அதிகம். குறிப்பாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல் விஜய் டிவியில் ஆபிஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் பவித்ரா ஜனனி .

,
இவர் அந்த சீரியலை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

மேலும் ஈரமான ரோஜாவே தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். மேலும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் மூலம் தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார் பவித்ரா ஜனனி.

சண்டை மூட்டிவிட்ட நெட்சன்:

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை சியமாந்தா கிரண் மாற்றும் சக நடிகை பவித்ரா ஜனனி இருவருக்கும் இடையே சிண்டு முடிய நினைத்து சம்பம் ஒன்றை செய்துள்ளார் ஒரு நெட்டிசன்.

அந்த நபரை நடிகை சியமாந்தா கிரண் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் சேர்ந்து விளாசிய சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சியமந்தா கிரண் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் இடம் பெற்ற வாட்டர் பாக்கெட் என்ற பாடலின் ரீல்ஸ் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இதனை பார்த்த இணையவாசி ஒருவர் இப்போதுதான் இதே பாடலுக்கு நடிகை பவித்ரா ஜனனி ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார்.

பவித்தாராவை காப்பி அடித்த சியமாந்தா?

அவருடைய கான்செப்ட் அப்படியே காப்பி அடித்து நீங்கள் உங்கள் இன்ஸ்டாவில் பதிவு செய்கிறீர்கள். இதற்கு தான் அந்த நடிகை கூட இருக்கீங்களா..?

அவருடைய தனித்தன்மை வீணாகிறது என்று நடிகை சியமந்தா கிரணுக்கும் நடிகை பவித்ரா ஜனனிக்கும் சிண்டு முடியும் விதமாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

இதனை பார்த்த சியமந்தா கிரண் இதற்குப் பெயர் இன்ஸ்பிரேஷன். தயவு செய்து அகராதியில் இதற்கு உண்டான அர்த்தத்தை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

அதேபோல தனித்துவத்திற்கான அர்த்தத்தையும் நீங்கள் அடையாளம் காண முயற்சி செய்ய வேண்டும் என பதில் கொடுத்தார்.

இதனை பார்த்த அந்த இணையவாசி இன்ஸ்பிரேஷன்..? அப்படி என்றால் நீங்கள் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்..

காண்டான சியமாந்தா விளாசிய பவித்ரா:

ஒன்றும் தெரியாத அந்த நடிகையை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்று பதில் கொடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து, நடிகை சியமந்தா கிரண்.. கடவுள் தான் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும்.

முகம் தெரியாத உங்களை போன்ற நபர்கள் ஒன்றும் தெரியாத நடிகை என்று வார்த்தைகளை பயன்படுத்துவதெல்லாம் என்னவென்று புரியவில்லை.

நீங்கள் கூறிய கருத்தில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா…? என்று பாருங்கள் என முடிவு கொடுத்திருந்தார் பதிலடி கொடுத்திருந்தார்.

இதை பார்த்த நடிகை பவித்ரா ஜனனி இப்படி எல்லாம் பேசாதீர்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது என்று அந்த இணையவாசிக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version