புற்றுநோய் அறிகுறிகள் என்ன..? – என்ன தீர்வு..! – வாங்க பாக்கலாம்..!

 பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இன்றைய தலைமுறை ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் பல விதங்களில் புற்றுநோய் – யின் தாக்கம் அதிகரித்து வருவதை அவர்கள் உணர்ந்து இருந்தாலும் அதன் அறிகுறிகள் பற்றி அந்த அளவு விழிப்புணர்வு இருக்கிறதா என்றால் அது இல்லை என்று சொல்லக்கூடிய அளவு தான் உள்ளது.

பாரம்பரியம், மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்களாலும் மற்றும்  இரவு நேரங்களில் அதிக அளவு கண் விழித்து வேலை செய்வது, போன்ற காரணங்களால்  புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புற்றுநோய் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புற்று நோய்க்கான அறிகுறிகள்:

👍. இரவு நேரங்களில் இவர்கள் உறங்கும்போது அதிக அளவு வியர்வை வெளியேறும். இது புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

👍.  உணவை நன்கு மென்று விழுங்கும்போது அதில் பிரச்சனைகள் ஏற்படும். எளிதில் உணவை உங்களால் விழுங்க முடியாது. இதுவும் ஒருவித அறிகுறிதான் புற்று நோய்க்கு.

👍. அதுமட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது. மேலும் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது புற்றுநோய்க்கான அறிகுறி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

👍. கடுமையான உடல் வலி ஏற்படுவதோடு உடலில் இருக்கும் மச்சம் அல்லது மருவில் திடீர் என்று மாற்றங்கள் ஏற்படலாம்.

👍. திடீரென தொடர் இருமல் ஏற்பட்டு அந்த இருமல் கட்டுக்கடங்காமல் இருப்பதும் உடலில் அங்கங்கு கட்டிகள் அல்லது வீக்கங்கள் உருவாகுவதும் இதன் அறிகுறிகள் தான்.

👍. இயல்பாக இருப்பதை விட திடீர் என்று உடல் எடை குறைதல் உடல் பலவீனம் ஆதல் போன்றவை இந்த புற்று நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய இயற்கை வழிகள் :

புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய இயற்கை வழிகளில் ஒன்று புற்றுநோயை தடுக்கக்கூடிய உணவுப் பொருட்களை அதிக அளவு நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 அதுவும் நம் முன்னோர்கள் கூறியபடி அந்த உணவினை குறிப்பிட்ட மாத இடைவெளிகளிலோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

👌. வெங்காயம் பூண்டு போன்ற பொருட்களுக்கு புற்றுநோயை வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளதால் இதை தினமும் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

👌. சால்மன் மீனில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் அதிக அளவு இருப்பதால் இதை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோயை   உருவாக்கும் செல்களை அழிக்கும்.

👌. அதுபோலவே தற்போது நாம் மறந்து போன சுண்டைக்காய் கண்டங்கத்திரி போன்றவற்றை உணவில் 15 நாட்களுக்கு ஒரு முறை சேர்ப்பதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam