டி ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்… தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!

திரைத் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த சகலகலா வல்லவன் டி ராஜேந்தர் அடுக்குமொழியை பேசுவதில் அண்ணாவிற்கு அடுத்த இடத்தை பிடித்தவர்.

தன் பன்முகத் திறமையால் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு இவரது இவருடைய மகன் சிலம்பரசன் மற்றும் குறளரசன் திரையுலகில் பல்வேறு வகைகளில் சாதனைகளை செய்து வருகிறார்கள்.

சகலகலா வல்லவன் டி ராஜேந்தர்..

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்ட டி ராஜேந்தர் மயிலாடுதுறையில் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர் இவரது இயற்பெயர் தேசிங்கு ராஜேந்தர்.

இதையும் படிங்க: நயன்தாரா உடம்பில் இந்த வேலை செய்ய சொன்னாலும் செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

பள்ளிப் பருவம் முதற்கொண்டு இவர் மேடை ஏறி பேச வேண்டும் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் எதுகை, மோனையில் பேசி சக மாணவர்களின் கை தட்டல்களை பெற்றவர்.

இதனை அடுத்து ரயிலில் படிக்க பயணம் செய்து வந்த இவர் கருவாட்டுக் கூடையுடன் ஏறிய பெண்களுக்காக பாடிய கூடையிலே கருவாடு என்ற பாடல் ஒரு தலை ராகம் படத்தில் இடம் பிடித்து மாபெரும் வெற்றியை தந்தது.

பட்டப்படிப்பு படித்த இவர் பிஏ பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். இளமைக்காலத்தில் வறுமையில் வாடிய இவர் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதற்கு போதிய அளவு பண வசதி இல்லை என்பதால் மயிலாடுதுறையில் இருக்கும் தியேட்டருக்கு வெளியே உள்ள சாக்கடையில் தனியாக நின்று பல படங்களின் பாடல்களையும், வசனங்களையும் கேட்டு ரசித்தவர்.

டி ராஜேந்தர் பற்றி அறியாத உண்மைகள்..

பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தை பார்த்துவிட்டு இவருக்கு சினிமாவில் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதை அடுத்து சென்னைக்கு கிளம்ப முடிவு செய்தார்.

இதனை தனது நண்பர்களுக்கு சொல்ல அங்கு சென்று என்ன செய்வாய் என்று கேட்டதற்கு கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு சொன்னார்.

சென்னைக்கு சென்ற இவர் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட போது அவர்கள் நண்பர்கள் தான் இவருக்கு உதவி செய்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர் மூஞ்சிக்கு எல்லாம் ஷேவிங் ஒரு கேடா என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் சும்மா இருந்தா பிளேடு ஆவது மிஞ்சும் என ஊரே கேலி செய்து பேசியதை தாங்கிக் கொண்டு பின்னால் அவர்கள் ஆச்சரியப்படக் கூடிய அளவு சாதித்து காட்டினார்.

ஒரு தலை ராகம் திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் தேடி வந்த இவர் இப்ராஹீமை தேடி அவரது சொந்த ஊருக்கே சென்றார். அந்த கிராமத்தில் இருந்து திரும்பி வர பஸ் இல்லாமல் சுமார் 15 கிலோமீட்டர் நடந்தே வீட்டுக்கு சென்றதோடு அவரின் தோட்டத்தில் வயல் வேலைகளை செய்வது நாட்டு நடுவது போன்ற உதவிகளை அவருடன் கூடவே இருந்து தொடர்ந்து செய்து வந்தார்.

ஒரு தலை ராகம் என்ற படத்தை இயக்க ஆயிரம் ரூபாய் என்ற சம்பளத்துடன் ஒப்பந்தம் செய்து அந்த படத்தை தயாரிக்க இப்ராஹிம் சம்மதம் தெரிவித்தார். அந்த படத்தில் புது முகங்களை அறிமுகம் செய்து தனது வருங்கால மனைவியான உஷா ராஜேந்திரனை பூக்காரி ஆக நடிக்க வைத்தார்.

தனது முதல் படத்தில் இவர் பெயர் டைட்டிலில் வராமல் போனது இவருக்கு மிகுந்த வேதனையையும், வலியையும் தந்தது. இந்த கதை அவர் வாழ்க்கையில் நடந்த கதையாக இருக்கலாம் என்று இன்று வரை கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது.

விஷயம் தெரிஞ்சா வாய்ப்பிளப்பீங்க..

சினிமாவில் நடிக்கும் போது படத்தின் ஹீரோயினியை தொடாமல் நடிப்பேன் என்று சொன்னதை இன்று வரை ஃபாலோ செய்து வரும் இவர் சினிமாவில் ஒரு புரட்சியை செய்தார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: விஜய் என்னை பார்த்து அப்படி பேசினார்.. நடிகை ஜோதி மீனா ஓப்பன் டாக்..!

அதுமட்டுமல்லாமல் வசனம் பேசிக்கொண்டே சண்டை போடும் பழக்கத்தை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்தவர் இவர் தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. பல புது முகங்களை அறிமுகம் செய்து வெற்றி படங்கள் பலவற்றையும் கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் செட் மன்னர் என்ற பெயர் இவருக்கு இன்றளவும் உள்ளது. தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த இவர் காதல் தோல்வியின் ஞாபகமாக உயிர் உள்ளவரை உஷா என்ற படத்தை எடுத்தார் மேலும் இவர் உஷா என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதற்கு எடிட்டராக விளங்கினார்.

இப்போது உங்களுக்கு டி ராஜேந்தர் பற்றி அறியாத பல உண்மைகள் தெரிந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version