தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர் , பின்னணி பாடகர் மற்றும் வசனகர்த்தா இப்படி பல துறைகளில் கொடிகட்டி பறந்த கில்லியாக இருந்து வந்தவர் தான் டி ராஜேந்தர்.
திரைத்துறையில் ஒரே ஒரு துறையில் மட்டும் ஜெயிப்பதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் டி ராஜேந்தர் இத்தனை துறைகளிலும் கொடிகட்டி பறந்த மிகச்சிறந்த திறமைசாலியாக பார்க்கப்பட்டார்.
இயக்குனர் டி. ராஜேந்தர்:
திரை பின்பலம் இல்லாமல் தனது திறமையால் தனது சொந்த முயற்சியால் இந்த அளவுக்கு உயரத்தை தோட்ட உச்ச பிரபலமாக வளர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவரது திறமையும் விடா முயற்சி தான்.
மயிலாடுதுறையை சொந்த ஊராகக் கொண்ட டி ராஜேந்தர். சினிமா மீது மிகப்பெரிய ஆர்வமும் பற்றும் இருந்ததால் எப்படியாவது அதில் முன்னேற வேண்டும் என்று தனது முயற்சியை சிறுவயதிலிருந்தே ஆரம்பித்தார.
அதற்கு அடித்தளமாக அவருக்கு யாருடைய உதவிகளும் கிடைக்கவே இல்லை. அவராகவே சினிமாவில் வந்து தன்னை நிலை நாட்டிக்கொண்டார்.
சொந்த ஊரான மயிலாடுதுறையில் திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு டிக்கெட் எடுக்க கூட பணம் இல்லாமல் இருந்த டி ராஜேந்தர் அந்த தியேட்டருக்கு வெளியே இருக்கும் சாக்கடை ஓரமாக நின்று தியேட்டரில் ஒலிக்கும் படத்தின் வசனங்களையும், பாடல்களையும் கேட்டு அதை கற்று தெரிந்தார்.
அதன் மூலம் தனது படமான ஒரு தலை நாகம் படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹாமின் வீட்டுக்கு தோட்டக்காரனாக வேலை செய்து அதன் மூலம் தயாரிப்பாளராக அவரிடம் உதவி கேட்டு ” ஒருதலை ராகம்” படத்தை இயக்கினார்.
டி ராஜேந்தரின் முதல் திரைப்படம்:
இப்படி அவர் இயக்கிய முதல் படமாக வெளிவந்த ஒரு தலை ராகம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தாலும் அவரது பெயர் அந்த படத்தில் இடம் பெறவில்லை.
இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்க மும்முரம் காட்டி தனது திறமையை வெளிப்படுத்தியவர் டி ராஜேந்தர்.
திரைப்படத்துறையில் எந்த ஒரு துறையும் விட்டு வைக்காமல் தானே நடிப்பது, தானே படத்தை இயக்குவது, ஒளிப்பதிவ செய்வது ,இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் புகுந்து விளையாடினார்.
தன்னுடைய மகனையும் அதே போல் சினிமாவில் வளர வைக்க வேண்டும் என்று எண்ணத்திலேயே அவர் குழந்தையாக இருக்கும்போது தூக்கிக்கொண்டு சினிமா சூட்டில் போட்டவர் டீ ராஜேந்தர்.
சிம்புக்கு சினிமாவை ஊட்டி வளர்த்த டி ராஜேந்தர்:
அப்பா டீ ராஜேந்தர் இயக்கத்தில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இன்று சிம்பு மிகப்பெரிய நட்சத்திர நடிகராக இருப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் டி ராஜேந்தரின் உழைப்பும் அவர் மேற்கேற்றிய விதம்தான் என்றால் அதற்கு மிகையாகாது.
அப்பா டி ராஜேந்தர் போட்ட விதையால் தான் இன்று சிம்புவால் சிறந்த நடிகராகவும், சிறந்த இயக்குனராகவும், பாடல் ஆசிரியராகவும் இருக்க முடிகிறது.
டி ராஜேந்தர் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்றவாறு தனது திரைப்படங்களை இயக்கி மக்களை மகிழ்விப்பவர்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த ரயில் பயணங்கள், கிளிஞ்சல்கள், நெஞ்சில் ஒரு ராகம், மைதிலி என்னை காதலி, கூலிக்காரன், ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி உள்ளிட்ட பல்வேறு பல்வேறு படங்களை இயக்கி இயக்குனராக புகழ்பெற்றார்.
இது தவிர பல படங்களில் அவர் நடிகராகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடும் டி ராஜேந்திரன் தாடிக்கு பின்னால் உள்ள சோக கதையை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
டி. ராஜேந்தர் தாடிக்கு காரணம் தோல்விதான் என்று பலரும் கருத்து கூறி வந்தார்கள். ஆனால் இன்னொரு சோக கதையும் இருக்கிறதாம்.
தாடிக்கு பின்னால் மறைந்திருக்கும் சோகக்கதை:
அதாவது கல்லூரிக்கு செல்லும்போது தன்னுடைய தாடியை ஷேவ் செய்து கொண்டு செல்ல வேண்டும் என தனது உறவினர் ஒருவரிடம் கேட்டிருக்கிறார் டி ராஜேந்தர் .
அதற்கு அவரது உறவினரும் இவன் மூஞ்சிக்கு எல்லாம் ஷேவிங் ஒரு கேடா? சும்மா இருந்தா காசும் பிளேடும் மிஞ்சும் என சொன்னாராம்.
இதனால் ரொம்பவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான டி ராஜேந்தர் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையை வென்ற பிறகுதான் தாடியை சேவ் செய்வேன் என முடிவெடுத்துவிட்டாராம்.
அதன் பின்னர் தொடர்ந்து தனது அயராது உழைப்பின் மூலம் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக இயக்குனராகம் வளர்ந்து நின்றார்.
பின்னாளில் சினிமாவில் நினைத்தபடியே வளர்ந்த டி ராஜேந்தர்…. “நாம் வெல்லும் போது இருந்த இந்த தாடியை வென்ற பிறகு ஏன் எடுக்க வேண்டும்”? அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டாராம்.
இந்த ரகசிய தகவல் தற்போது இணையத்தில் கசிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனை ஷேர் செய்து நெட்டிசன்ஸ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.