பாலில் செஞ்ச பணியாரம்..! – பளபள உடம்பை பளிச்சென காட்டி.. பதற வைக்கும் தமன்னா..!

தமன்னா ( Tamanna Bhatia )-வின் சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதை பார்க்கும் ரசிகர்கள், தமன்னாவின் அழகை கண்டு, திகைத்து போய் உள்ளனர்.தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் தமன்னா.

Image Source : instagram.com/tamannaahspeaks/

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வியாபாரி படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான தமன்னா, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்த கல்லூரி படம் வாயிலாக, ரசிகர்கள் மததியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

Image Source : instagram.com/tamannaahspeaks/

அதைத்தொடர்ந்து தமிழில் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.பாகுபலி படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டர், நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கேஜிஎப், அயன், தோழா, சைரா, பையா, தேவி, சிறுத்தை வீரம், சுறா, வேங்கை, ஸ்கெட்ச், தர்மதுரை, பெட்ரோமாக்ஸ், தி்ல்லாலங்கடி, கேடி, கண்டேன் காதலை என பல படங்கள் இவரது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தின.

விஜய், அஜித், விக்ரம். சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, தனுஷ், பரத் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்தது குறிப்பிடத்தக்கதுஇப்போது தமன்னா, தெலுங்கில் போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார்.

Image Source : instagram.com/tamannaahspeaks/

இதில், சிரஞ்சீவியின் தங்கையாக, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமிழில் அஜித்குமார் நடிப்பில் வந்த வேதாளம் படத்தின் கதைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில், இப்போது நடித்து வரும் தமன்னா, அதன்பிறகு அரண்மனை 4 என்ற படத்தில் சுந்தர்சி படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவுக்குள் தமன்னா வந்து, 18 ஆண்டுகள் ஆகிறது. இதுபற்றி ஒரு நேர்காணலில் பெருமைப்பட்ட தமன்னா, இத்தனை ஆண்டுகளில், நிறைய கற்றுக்கொண்டேன். தமிழ் சினிமா ரசிகர்களின் இந்த அளவற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.

Image Source : instagram.com/tamannaahspeaks/

கடந்த வாரத்தில், அகமதாபாத், நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற நடிகை தமன்னா, அங்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஷால் உடன் சிவப்பு நிற ஆடையில் இருக்கும் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன. விஷாலின் தோளில் சாய்ந்தும், கட்டியணைத்தும், தோள்களை பற்றிய படியும், தமன்னா தந்திருக்கும் போஸ்களை பார்த்தால், அது பாடல் காட்சி போல தெரிகிறது.

Image Source : instagram.com/tamannaahspeaks/

ஆனால், தமன்னாவின் எடுப்பான அழகு, இதில் பரிபூரணமாக வெளிப்படுகிறது.என்னவென்று சொல்வதம்மா, பெண் அவளின் பேரழகை என ரசிகர்கள் தமன்னாவின் அழகில் மெய்மறந்து பாடி வருகின்றனர். இன்னும் சிலர், ஆக்‌ஷன் நடிகர் விஷாலுக்கு இப்படி ஒரு ரொமான்ஸ் வாய்ப்பா? எனவும் கமெண்டில் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …