தமிழ் சினிமாவிற்கு மிக தாமதமாக என்ட்ரி கொடுத்தாலும் கூட மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் கார்த்தி. ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக்கு சினிமாவின் மீது ஈடுபாடு என்பதே கிடையாது.
வெளிநாட்டிற்கு சென்று தொழில்ரீதியான படிப்புகள் மீதுதான் அவர் கவனம் செலுத்தி வந்தார். படித்து முடித்த பிறகு ஏதாவது ஒரு பெரிய தொழில் செய்து அதில் முன்னேறுவார் கார்த்தி என்றுதான் அவரது குடும்பமும் எதிர்பார்த்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக சினிமாவில் வளர்ச்சியை கண்டார் கார்த்தி. தன்னுடைய 27 வது வயதில் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கார்த்திக்கு வார்த்தைக்கு வந்தது.
தமிழில் வாய்ப்பு:
ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தி நடித்தார். ஆனால் அமீர் அந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி இருந்தார்.
முக்கியமாக கார்த்திக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் அதில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து இறங்கி வந்த ஒரு இளைஞன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இருந்தது கார்த்தியின் நடிப்பு.
அதனால் அந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது தொடர்ந்து கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட பருத்திவீரன் படத்தில் வரும் கதாபாத்திரம் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலையில்தான் கார்த்தியின் அடையாளத்தை மாற்றி அமைத்த திரைப்படமாக பையா திரைப்படம் இருந்தது. பையா திரைப்படத்தில் தமன்னாவிற்கு ஜோடியாக நடித்த கார்த்தி ட்ரெண்டில் இருக்கும் ஒரு இளைஞராக இருந்தார்.
கார்த்தி காதல்:
அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தமன்னாவிற்கும் கார்த்திக்கும் இடையே காதல் இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வந்தது. அதற்கு பிறகு கார்த்தியும் தமன்னாவும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்தனர்.
சிறுத்தை, தோழா மாதிரியான திரைப்படங்களில் ஒன்றாக நடித்தார். ஆனால் இவர்கள் காதல் உபகாரம் தெரிந்த உடனேயே கார்த்திக்கு அவர்களது வீட்டில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.
இருந்தாலும் தமன்னாவிற்கும் கார்த்திக்கும் இடையே இன்னமும் பேச்சுவார்த்தை இருந்து வருகிறது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. அதற்கு தகுந்தார் போல கார்த்தி அவருடைய 25வது திரைப்பட வெள்ளி விழாவை கொண்டாடிய பொழுது அதற்கு தமன்னாவை அழைத்திருந்தார்.
அப்பொழுது மேடையில் எறிய தமன்னாவை வெகுவாக புகழ்ந்து பேசினார் கார்த்தி. நடனத்தில் சிறப்பாக வரவேண்டும் என்பது தமன்னாவின் சிறு வயது முதலே இருந்து வந்த ஆசை. அதை அவர் ஆடிய காவலா மாதிரியான பாடல்களில் எல்லாம் நீங்கள் அவற்றை பார்க்க முடியும் என்று கூறியதோடு மட்டுமின்றி மேடை ஏறி தமன்னாவுடன் நடனமாடி இருந்தார் கார்த்தி.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கார்த்தி மீது தன கல்யாணம் ஆனதே மறந்துவிட்டு தனது பழைய காதலியுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்று அப்பொழுது இது குறித்து பேசி வந்தனர்.