நடிகை தமன்னா துளி மேக்கப் இல்லாமல் விமான நிலையத்துக்கு வந்து இருக்கக்கூடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
பொதுவாக நடிகைகள் மேக்கப் இல்லாமல் பார்க்கும் பொழுது ஓரமாகத் தான் தெரிவார்கள். ஆனால், நடிகை தமன்னா ஏதோ வயதான பெண் போல காட்சியளிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.
தமன்னாவா இது..? என்று கேள்வி எழுப்பும் விதமாக இருக்கிறது இந்த வீடியோ காட்சிகள். கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்திய நடிகை தமன்னா தற்போது அதே உடையுடன் விமான நிலையத்திற்கு வந்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா.
கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக நின்று போனது.
பொதுவாக இயக்குனர் ராஜமௌலி படங்களில் நடிக்கும் நடிகைகள் அத்தோடு அவர்களுடைய திரைப் பயணத்தை மறந்துவிட வேண்டும் என்ற பேச்சும் இருக்கிறது. அதனை நிரூபிக்கும் விதமாக வே நடிகர் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகிய இருவருக்குமே திரை வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்ற நிலைதான் இருக்கிறது.
ஆனால் நடிகை தமன்னா முட்டிமோதி எப்படியாவது படங்களில் நடித்து விட வேண்டும் என்று சில துக்கடா படங்களில் நடித்து வருகிறார். நடிகை அனுஷ்காவிற்கு சுத்தமாகவே படவாய்ப்புகள் நின்று போய்விட்டது.
அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார் இப்படி பல காரணங்கள் இருந்தாலும் கூட நடிகை தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க விமான நிலையத்தில் முகத்தில் துளி மேக்கப் இல்லாமல் வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் நடிகை தமன்னா. இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.