நடிகை தமன்னா சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் தோன்றினார். அப்பொழுது அவர் கையில் வைத்திருந்த பேக் ரசிகர்களின் கண்களை கண்களை கவர்ந்தது. இந்நிலையில் அந்த பேக்கின் விலை என்ன..? என்ற விபரங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடித்திருந்தார் நடிகை தமன்னா.
அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் ரீஎண்டரி கொடுக்கிறார் நடிகை தமன்னா. இது நடிகை தமன்னாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது,
மறுபக்கம் நான்கு ஆண்டுகள் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் இப்போதும் பிரபலமாக இருக்கிறார் நடிகை தமன்னா.
இன்னும் சொல்லப்போனால் நான்கு ஆண்டுகள் நடிகை தமன்னா படங்களில் நடிக்கவில்லையா..? என்று ரசிகர்களே ஷாக்காகி தான் போவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களுடன் தன்னை நெருக்கமாகவே வைத்துக் கொண்டிருந்தார் நடிகை தமன்னா.
பொதுவாக பிரபலங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்ததாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சில பொருட்கள் எதற்கு இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்கள்..? அப்படி என்னதான் இதில் இருக்கிறது.. என்று கேள்விகளை எழுப்பும் விதமாக இருக்கும்.
அந்த வகையில், தற்பொழுது நடிகை தமன்னாவின் பேக்கின் விலை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மார்க்கெட்டில் 100, 150 ரூபாய்-கு விற்கும் இது போன்ற பேக்-ஐ இத்தனை லட்சம் கொடுத்து நடிகை தமன்னா வாங்கினாரா என்று ரசிகர்கள் வியந்து போயிருக்கின்றார்கள்.
ஆம் இந்த பேக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 3 லட்சம் ரூபாய்களை தாண்டுகிறது. அதிலும் இந்த பேக் இன் உண்மையான விலை 4 லட்சத்தி 80 ஆயிரம் ரூபாயாம். 38 சதவீதம் தள்ளுபடி போக 3 லட்சம் ரூபாய்க்கு இந்த பேக் விற்பனை செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இன்று பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவர் படித்து முடித்து வருவதற்கு ஆகக்கூடிய செலவுதான் இந்த மூன்று லட்சம் ரூபாய். ஆனால், ஏதோ சுருக்கு பை அளவுக்கு இருக்கும் இந்த ஹேண்ட் பேக்கின் விலை மூன்று லட்சம் ரூபாயாம் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
மேலும் இன்னும் சில ரசிகர்கள் எங்களுடைய மாத வருமானமே 15 ஆயிரம் ரூபாய் தான்.. கணக்கு போட்டால் நாங்கள் ஒரு வருடம் உழைத்தால் கூட இந்த பேக்கை எங்களால் வாங்க முடியாது.
ஆனால், இந்த வருமானத்தை வைத்து தான் எங்களுடைய குடும்பமே நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஒரே ஒரு பேக்கின் விலை 3 லட்சம் ரூபாயா..? என்றும் இது மிகவும் ஒரு ஆபத்தான உலகம் என்றும் தங்களுடைய புலம்பல்களை பதிவு செய்து வருகின்றனர்.
Summary in English : Actress Tamanna Bhatia recently surprised her fans by revealing the price of her handbag. The whopping amount of Rs. 3 lakhs that she paid for a single bag has left many shocked, as it is a hefty sum to spend on an accessory.