பிரபல இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா புடவை அணிந்திருக்கும் நடிகை தமன்னாவை அலேக்காக தூக்கி இடுப்பில் கை வைத்து நடக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தேவி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா அவரை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பை பெற்றார்.
இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிய நடிகை தமன்னா தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தெலுங்கு தமிழ் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்பு கிடைத்தது.
தன்னுடைய 15 வயதிலேயே சினிமா துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இவர் முதலில் நடித்த இந்தி படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
ஆனால் அந்த படம் தோல்வியை சந்தித்தது. அவரை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை தமன்னா விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகையாகவும் இறங்கி வந்திருக்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தற்போதைய ஆசை திருமணம் குறித்து நான் யோசித்துக் கூட பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
இவருடைய இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது. மறுபக்கம் பிரபுதேவா இவரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.