தமன்னா-வை திருமணம் செய்து கொள்வீர்களா..? – காதலன் கொடுத்த ஷாக் பதிலை பாருங்க..!

தமிழ் திரை உலகில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி என்ற திரைப்படம் தான் ஒரு மிகச்சிறந்த படமாக அமைந்து ரசிகர்களின் மத்தியில் இவரை எடுத்துச் சென்றது. கல்லூரி படத்தில் தனது சீரியல் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி போன்றவர்களோடு நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சக்கை போடு போடும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் தமன்னா.

இதனை அடுத்து தமிழில் வாய்ப்புகள் இவருக்கு படிப்படியாக குறைந்ததை அடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தமன்னாவை ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆட கூடிய வகையில் ஒரு ரோலை கொடுத்தார்.

இந்தப் பாடலும் படு கிட் அடித்து ட்ரெண்டிங் உச்சிக்கு தமன்னாவை அழைத்துச் சென்றது.இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரக்கூடிய தமன்னா லஸ்ட் ஸ்டோரி இரண்டில் நடித்த போது நடிகர் விஜய் வர்மாவோடு காதல் ஏற்பட்டது.

இந்த காதலை இவர்கள் இருவருமே சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்து இருந்தனர். இதனை அடுத்து இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த போதும் எந்த விதமான அறிவிப்பும் அது குறித்து வரவில்லை.

மேலும் இவர்களின் இரண்டு வீட்டு நபர்களும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த காரணத்தால் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எனினும் அதற்கு உரிய எந்த ஒரு ஏற்பாடுகளும் நிகழ்ந்ததா? என்பது தெரியவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் தமன்னாவின் காதலன் நடிகர் விஜய் வர்மா-விடம் செய்தியாளர்கள் தமன்னாவுக்கும் உங்களுக்கும் திருமணம் எப்போது..? நிஜமாகவே தமன்னா-வை திருமணம் செய்து கொள்வீர்களா..? என்று கேள்வி கேட்க அதற்கு இதற்கு பதில் அளிக்க முடியாது என்று ஒற்றை வரியில் கூறி முடித்துக் கொண்டார்.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு இடையே ஏதேனும் மனக்கசப்பு உள்ளதா? இருவருக்கும் பிரிவு ஏற்பட்டு விட்டதா? என்ற கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள். இதற்கான பதிலை விஜய் வர்மா அல்லது தமன்னா இருவரில் யாராவது ஒருவர் விளக்கமாக கூறினால் தான் ரசிகர்கள் இடையே ஏற்பட்டிருக்க கூடிய மனக்குழப்பம் நீங்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam