கொட்டிக்கிடக்கும் ரோஜாபூக்கள் மீது கும்முனு படுத்திருக்கும் தமன்னா – ராதா போல் மாறி போஸ்!

இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக நட்சத்திர அந்தஸ்தில் இருந்துக் கொண்டிருக்கிறார் .

தற்போது இவர் மார்க்கெட் உச்சத்தில் நம்பர் ஒன் நடிகை ஆகவும் பார்க்கப்பட்டு வருகிறார். மும்பை மகாராஷ்டிரா பகுதியில் பிறந்து வளர்ந்தார் நடிகை தமன்னா.

நடிகை தமன்னா:

தன்னுடைய 13 வயதிலேயே நடிப்பு நடிப்பு பயணத்தை தொடங்கினார். முறையாக நடிப்பு கலையை கற்றுக் கொண்ட நடிகை தமன்னா ஒரு வருடம் பிரித்வி தியேட்டரில் சேர்ந்து அங்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிப்பு குறித்து கற்றுக் கொண்டார்.

முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் .

அதன் பிறகு தெலுங்கில் ஸ்ரீ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தமன்னா.

அதன் பிறகு தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த தமன்னாவுக்கு வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படங்களில் நடிகை ராதா:

ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா , தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, நண்பேண்டா, பாகுபலி, தோழா , தர்மதுரை, தேவி இப்படி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

இதனால் மிக குறுகிய காலத்திலேயே தமன்னா தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாகவும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொண்டார் .

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மற்றும் ஹிந்தி மொழியிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வந்த தமன்னாவுக்கு இந்திய சினிமா அளவில் மார்க்கெட் உச்சத்தில் உயர்ந்தது.

தற்போது பாலிவுட்டில் வெளியாகும் பல்வேறு வெப் தொடர்களில் தொடர்ச்சியாக தமன்னா நடித்து வருகிறார்.

முன்னதாக லஸ்ட் ஸ்டோரீஸ், ஜீ கர்தா உள்ளிட்ட தொடர்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தது மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி முகம் சுளிக்க வைத்திருந்தது .

ராதாவாக மாறிய தமன்னா:

அது மட்டுமில்லாமல் இந்த வெப் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த விஜய் வர்மா என்பவரை ரகசியமாக காதலித்து டேட்டிங் செய்து வந்தார்.

பின்னர் அதன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து தீயாய் பரவ ஆரம்பித்தது. அதன் பின் விஜய் வர்மா தமன்னா இருவரும் தங்களது காதலை ஒப்புக்கொண்டார்கள்.

தொடர்ச்சியாக ஹிந்தி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அவர் ஜெயிலர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை தமன்னா வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

அதனால் ராதாவாக அலங்கரித்துக் கொண்டு ஃபோட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரும் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

கண்ணன் தேடும் ராதையாக நடிகை தமன்னா மாறி இருக்கும் இந்த புகைப்படங்கள் அனைவருக்கும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் கொட்டிக்கிடக்கும் ரோஜாபூக்கள் மீது படுத்துக்கொண்டு போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version