2 நடிகைகளுடன் திருமணம்.. KR விஜயா மருமகன்.. நடிகர் ரஞ்சித் யார் தெரியுமா..?

தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் ரஞ்சித். இவர் கே.எஸ். ராஜ்குமார் இயக்கிய பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து முதல் படத்திலேயே பேமஸ் ஆன நடிகராக பேசப்பட்டார். இதன்முலம் அவரின் மார்க்கெட் சூடு பிடித்தது.

தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் ரஞ்சித் நடிகர் , இயக்குனர் , அரசியல்வாதியாக இருந்து வருகிறார்.

நடிகர் ரஞ்சித்:

பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ள இவர் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..!

தொடர்ந்து ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்துவந்த ரஞ்சித் அதன் பிறகு இரண்டாவது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

மைனர் மாப்பிள்ளை, பாரதி கண்ணம்மா , மரு மலர்ச்சி, உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்தார்.

இதில் மறுமலர்ச்சி திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். அவரின் வில்லத்தனமான நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.

வில்லன் ரோலுக்கு கிடைத்த அடையாளம்:

அதற்காக சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். அதைத் தொடர்ந்து, அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.

பின்னர் நட்புக்ககா படத்தில் நடித்தார். தர்மா படத்தில் வில்லனாக நடித்தார். தேசிய கீதம் மற்றும் புதுமை பித்தன் ஆகிய படங்களில் துணை வேடத்தில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: இறந்த விவேக் கொடுத்த வாழ்க்கை.. வயதானவருடன் திருமணம்.. ஓடி போன காதல் மன்னன் மானு கதை..!

மேலும் குறைந்த பட்ஜெட் திரைப்படமான சேரன் சோழன் பாண்டியனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் .

பெரும் தோல்வி… பணப்பற்றாக்குறை:

அதன் பின்னர் 2003ம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்த ரஞ்சித் பீஷ்மர் எனும் திரைப்படத்தை இயக்கி, தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்தார் .

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, பணப்பற்றாக்குறையால் ரஞ்சித்தால் அடுத்த படத்தை சொந்தமாக தயாரிக்க முடியவில்லை.

ரஞ்சித் அதன்பிறகு மலையாளப் படங்களில் ஒன்றிரண்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்துவங்கினார்.இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் அரசியல் பக்கம் தலைகாட்ட ஆரம்பித்தார்.

ரஞ்சித் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் செய்தித் தொடர்பாளராகவும் பல ஆண்டுகள் இருந்தார்.

கடந்த 2016ல் அதிமுக முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு , அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வத்தின் அணிக்கு ரஞ்சித் ஆதரவளிக்கத் தொடங்கினார்.

பின்னர் ரஞ்சித் அதிமுகவில் இருந்து விலகி, கட்சியின் புதிய துணைத் தலைவராக பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார்.

ஆனால் அங்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் நிலைப்பாட்டை ஜீரணிக்க முடியவில்லை என்று கூறி அக்கட்சியிலிருந்து விலகினார்.

அதன்பின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்து அதிகாரப்பூர்வமாக கட்சியில் சேர்ந்தார்.

இதனிடையே சீரியல்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் கூட விஜய்யின் அரசியல் பயணத்தை ஆதரவளித்து கருத்து கூறியிருந்தார்.

முதல் மனைவி பிரியா ராமன்:

இவர் நடிகை பிரியா ராமனை காதலித்து 1999ல் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 2014ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து ஆன அதே ஆண்டில் ரஞ்சித் ராக சுதா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

KR விஜயா மகளுடன் மறுமணம்:

ரகா சுதாவும் ஒரு நடிகைதான். இவர் தமிழ் , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இவர் பிரபல நடிகை கே ஆர் விஜயாவின் சொந்தம்.

இதையும் படியுங்கள்: ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!

ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் அவருக்கு சரியாக அமையவில்லை. திருமணம் ஆன ஒரு வருடத்திலே ராக சுதாவையும் விவாகரத்து செய்தார் ரஞ்சித்.

பின்னர் மூன்று வருடம் கழித்து கடந்த 2018ல் முதல் மனைவி பிரியா ராமனை மீண்டும் திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version