தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்ட சிவக்குமார்.. என்ன காரணம்ன்னு பாருங்க..

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் சிவகுமார். 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் திரைப்படம் மூலமாக முதன்முதலாக சுரேந்தர் என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சிவகுமார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் வயதான நடிகர்களாக மாறிய பிறகு தமிழ் சினிமாவிற்கு இளம் நடிகர்களின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால் அப்பொழுது இருந்த பெரும்பான்மையான நடிகர்கள் வயதான நடிகர்களாக இருந்தனர்.

இந்த நிலையில்தான் நடிகர் ஜெய்சங்கரும் சிவக்குமாரும் இளம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். அப்பொழுது இருந்த கல்லூரி பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகர்களாக இவர்கள் இருவருமே இருந்து வந்தனர்.

நடிகர் சிவக்குமார்:

அப்படி இருந்துமே கூட சிவகுமார் ஒழுக்கம் தவறாத ஒரு நடிகராக இருந்து வந்தவர் என்று இப்பொழுது வரை பேசப்படும் நடிகராக இருந்து வருகிறார். அப்போதைய கால கட்டங்களில் சிவாஜி போன்ற நடிகர்களுக்கு மகனாக சிவகுமார் நடித்து வந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் சிவகுமார் புகழ் பெற்ற நடிகராக இருந்தார். சிவகுமார் கதாநாயகனாக நடித்த கவிக்குயில் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில்தான் ரஜினிகாந்த் நடித்தார்.

தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்டார்:

அந்த அளவிற்கு அப்பொழுது சிவக்குமார் பிரபலமான நடிகராக இருந்தார். பிறகு அவருக்கு வாய்ப்புகள் எல்லாம் குறைந்த பிறகு தற்சமயம் பெரிதாக இவர் சினிமாவில் நடிப்பது கிடையாது. ஆனால் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பொழுதே சீரியல்களில் கவனம் செலுத்த துவங்கினார் சிவகுமார்.

சித்தி அண்ணாமலை மாதிரியான சீரியல்களில் நடித்து அதிலும் கொஞ்சம் இவர் வரவேற்பை பெற்றார். ஆனால் இடையிலேயே சீரியலில் நடிப்பதில் இருந்தும் விலகிவிட்டார். தற்சமயம் குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் சிவகுமார்.

இந்த நிலையில் சீரியலில் இருந்து அவர் விலகுவதற்கான முக்கிய காரணம் என்னவென்று ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சீரியலில் நடித்த பொழுது நடந்த அவமானத்தின் காரணமாகதான் சீரியலில் நடிப்பதையே விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

என்ன காரணம்ன்னு பாருங்க

சித்தி சீரியலில் சிவகுமார் நடித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் போல மிகவும் ஃபீல் பண்ணி ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு இருந்த பெண் அவரை பார்த்து அலட்சியமாக சிரித்து விட்டாராம். இதனால் கோபமடைந்த சிவகுமார் பிறகு சினிமாவிலேயே நடிக்க கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது அந்த பெண் சிரித்தது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. செருப்பால் என்னை நானே அடித்துக் கொண்டு இனிமேல் சினிமாவில் நடிக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version