திரை உலகில் மட்டுமல்லாமல் சாமானிய மனிதர்களும் இரண்டு பொண்டாட்டிகள் கட்டிக்கொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்துவதை பார்த்திருப்பீர்கள். இது உண்மையில் சாத்தியமான ஒன்றா இல்லை தினம் தினம் அங்கு நடக்கும் ரவுசுகள் பற்றி விதவிதமான செய்திகளையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
அந்த வகையில் நமது இன்றைய பதிவில் இரண்டு பொண்டாட்டிகளுடன் ஒரே வீட்டில் குஜாலாக வாழ்ந்த நடிகர்கள் யார் யார் என்பது பற்றிய விரிவான தகவலை படித்து தெரிந்து கொள்ளலாம்.
இரண்டு பொண்டாட்டி நடிகர்கள்..
நம்பர் 1
திரையுலகில் தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சரவணன் பார்ப்பதற்கு கேப்டனை போல இருந்தாலும் இரண்டு பொண்டாட்டிக்காரர். இவரின் முதல் மனைவி சூரிய ஸ்ரீ இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல வருடங்கள் குழந்தை பிறக்காததை அடுத்து வேறொரு பெண்ணை தனது முதல் மனைவியின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி பெற்று பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்தும் தன் இரு மனைவிகளோடு ஒரே வீட்டில்தான் இன்று வரை நடிகர் சரவணன் வாழ்ந்து வருகிறார்.
நம்பர் 2
அடுத்ததாக வரும் நடிகர் முத்துராமனின் மகன் நவரச நாயகன் கார்த்திக். இவர் நடிகை ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சில வருடங்களுக்குப் பிறகு நடிகை ராகினியின் தங்கையை நடிகை ரதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.
நம்பர் 3
நாட்டாமை படத்தில் நம்மை அனைவரையும் கவர்ந்த நடிகர் விஜயகுமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது படங்கள் பல மாஸ் கிட்டை தந்துள்ளது. இவர் ஆரம்பத்தில் முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இதனை அடுத்து திரைப்பட நடிகையான மஞ்சுளாவை காதலித்து வந்த இவர் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
மேலும் தன் இரு மனைவியோடும் இணைந்து ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்த இவர் தனது இரண்டாவது மனைவியின் இறப்புக்கு பின்பு தனது முதல் மனைவியோடு வசித்து வருகிறார்.
தாலி கட்டாமல் 2-மனைவியாக நினைத்து வாழ்ந்த நடிகர்கள்..
இந்த வரிசையில் முதலாவதாக இடம் பிடிப்பவர் நடிகர் பிரபு இவர் புனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து திரைப்படத்தில் நடித்த நடிகை குஷ்புவை காதலித்து வந்ததை அடுத்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இவர்களது வாழ்க்கைக்கு பிரேக் அப் தந்துவிட்டு மீண்டும் தன் முதல் மனைவியோடு தற்போது வசித்து வருகிறார். மேலும் குஷ்பூ சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
மேலும் இந்த வரிசையில் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான பிரபுதேவாவை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சனாக அழைக்கப்படும் பிரபுதேவா தனது முதல் மனைவி இருக்கும் போதே லேடி சூப்பர் ஸ்டார் ஆக தமிழில் வலம் வந்த நடிகை நயன்தாராவுடன் பார்ட்னர்ஷிப் முறையில் வாழ்ந்து வந்ததாக விஷயங்கள் வெளி வந்தது.
இதனை அடுத்து மூத்த மனைவி கொடுத்த பிரஷரின் காரணமாக நயன்தாரா பிரபுதேவாவை விட்டு பிரிந்ததை அடுத்து தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு சினிமா மட்டுமல்லாமல் பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
இப்போது உங்களுக்கு இரண்டு பொண்டாட்டியை கட்டிக்கொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய நடிகர்கள் யார் யார் என்பது விரிவாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம். இது பற்றிய உங்களது எண்ணங்களை கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம்.