ஹீரோயினே ஓ.கே சொல்லியும் உதட்டு முத்தம் கொடுக்க மறுத்த 3 நடிகர்கள்!.. ரொம்ப நல்லவங்க போல!.

தமிழ் சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகள் என்பது சில சமயங்களில் நடிகர் நடிகைகளுக்கு சங்கடமான விஷயமாக அமைவது உண்டு. சில நடிகைகளே இது குறித்து பேட்டியில் கூறும் பொழுது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கும் என்று கூறி இருக்கின்றனர்.

ஆனால் அதே சமயம் சினிமாவில் நிறைய பிரபலங்கள் முத்த காட்சிகள் போன்ற கவர்ச்சி காட்சிகளை நிறைய டேக் எடுத்து நடிப்பது உண்டு. அது அதிக விமர்சனத்திற்கு உள்ளாவதும் உண்டு. அப்படி முத்தக்காட்சிகளில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துமே கூட இல்லை நான் நடிக்க மாட்டேன் என்று கூறிய பிரபலங்களும் இதே சினிமாவில் இருந்து வருகின்றனர்.

ஹீரோயினே ஓ.கே சொல்லியும்

அப்படியான பிரபலங்களில் முதலில் இருப்பவர் உதயநிதி. நடிகர் உதயநிதி நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பெரிதாக கவர்ச்சி காட்சிகளில் நடித்தது கிடையாது. இந்த நிலையில் அவர் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடித்த பொழுது அந்த படத்தின் கதாநாயகியுடன் ஒரு ரொமான்ஸ் காட்சி இருக்கும்.

அந்த காட்சியில் அவருக்கு உதட்டில் முத்தமிடுவது போன்ற காட்சி இருந்தது. ஆனால் உதயநிதி அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதேபோல நடிகர் சிபிராஜ் சத்யா என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தின் நடிகையோடு முத்தக்காட்சி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு நடிகையே ஒப்புக்கொண்ட போதும் கூட நடிகை சிபிராஜ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் தனது மகன் தன்னுடைய திரைப்படங்களை பார்த்து வருகிறான். அவன் அதை பார்த்து கெட்டுப்போய் விடுவான்.

மறுத்த 3 நடிகர்கள்

எனவே நான் அப்படி நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் சிபிராஜ் மேலும் சிபிராஜ் அதற்கு முன்பு நடித்த திரைப்படங்களிலும் பெரிதாக கவர்ச்சி காட்சிகளில் நடித்தது கிடையாது. இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் சூர்யா.

மாற்றான் படத்திற்கு தேவையான காட்சியாக முத்த காட்சி இருந்தும் கூட சூர்யா பலமாக அதில் நடிப்பதற்கு மறுத்திருக்கிறார். அதில் சுத்தமாக ஈடுபாடு இல்லை என்றும் கூறியிருக்கிறார். மாற்றான் திரைப்படத்தில் திரையரங்கில் அமர்ந்திருக்கும் பொழுது காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுக்கும் காட்சி வரும்.

அந்த காட்சியை நடிக்கவே முடியாது என்று சூர்யா சொன்னார். அதன் காரணமாக பிறகு கிராபிக்ஸ் முறையில் இருவரையும் தனித்தனியாக முத்தம் கொடுக்க வைத்து அவற்றை ஒன்றிணைத்து இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டது போல மாற்றி இருந்தார் படத்தின் இயக்குனர் கே வி ஆனந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version