அப்பாவுக்கு தெரியாமல் மகள் அக்ஷாரா ஹாசன் செய்த வேலை..!

தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அனைவராலும் அறியப்படும் ஒரு நபராக அக்ஷரா ஹாசன் இருந்து வருகிறார்.

நடிகை சுருதிஹாசனின் தங்கையான அக்ஷரா ஹாசன் கமல்ஹாசனின் மகள் ஆவார். சொல்லப்போனால் சுருதிஹாசனை விடவே அக்ஷரா ஹாசன் மிகவும் சுட்டியான பெண் என்று சுருதிஹாசனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதனாலேயே கமல்ஹாசனுக்கு பிடித்த மகள்களில் அர்ச்சனாஹாசனுக்கு தனித்துவமான ஒரு இடம் உண்டு. இவர் நடித்த திரைப்படம் என்று பார்க்கும் பொழுது மிகவும் குறைவான திரைப்படங்களில்தான் அக்ஷரா ஹாசன் நடித்திருக்கிறார்.

சினிமாவில் எண்ட்ரி:

எனவே இவருக்கு சினிமாவின் மீது அவ்வளவாக ஈடுபாடு என்பது கிடையாது இருந்தாலும் அவ்வப்போது முகத்தை சினிமாவில் காட்டிக் கொள்வார் என்று கூறலாம். 2015 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஷமிதாப் என்கிற திரைப்படத்தில்தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அக்ஷரா ஹாசன்.

அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ்தான் நடித்திருந்தார். அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் இவர்கள் இருவருமே கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம்தான் சமிதாப். வாய் பேச முடியாத கதாபாத்திரமாக அதில் தனுஷ் நடித்திருப்பார்.

அந்த திரைப்படம் ஹிந்தியில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதனை தொடர்ந்து 2017 இல் வெளியான விவேகம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அக்ஷரா ஹாசன். விவேகம் திரைப்படத்தில் கணினி ஹேக்கிங் செய்யும் ஒரு கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இருக்கும்.

தமிழில் தொடர்ந்து படங்கள்:

பிறகு கடாரம் கொண்டான் திரைப்படத்தில் கதாநாயகியாகவே இவர் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்தில் இவருக்கு அதிக காட்சிகள் என்பதே இல்லை . தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அடுத்து நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி சேர்ந்து நடிக்கும் அக்னி சிறகுகள் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் அக்ஷரா ஹாசன் ஒரு பேட்டி ஒன்றில் பேசும் பொழுது அவரிடம் நிறைய சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் உங்கள் அப்பாவுக்கு தெரியாமலே ஏதாவது தவறுகள் செய்து அதை அவரிடம் மறைத்துள்ளீர்களா? என்று கேட்கப்பட்டது.

 அதற்கு பதிலளித்த அக்‌ஷரா “அதை இப்போ சொன்னால் அப்பாகிட்ட மாட்டிப்பேனே என்று கூறி அத ரகசியத்தை கூறியிருக்கிறார். எனது தோழி ஒருவர் ஒரு ஆட்டோ வைத்திருக்கிறார். அதை வாங்கி ஒருமுறை ஓட்டி சென்றேன்.

அப்படி வேகமாக ஓட்டி சென்று திரும்பும் பொழுது ஆட்டோ தடம் மாறி பல்டி அடித்து கீழே விழுந்தது. அதில் எனக்கு அடிபட்டது இதை நான் அப்போது அப்பாவிடம் கூறவே இல்லை. அதற்காக இப்பொழுது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார் அக்‌ஷரா ஹாசன்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version