சென்னையை பாக்கவே பயமா இருக்கு.. பிரபலம் குறித்து அனிதா சம்பத் வேதனை..!

தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிதா சம்பத். இவரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் புகழ்பெற்ற அனிதா சம்பத், பின்னர் திரைப்படங்களிலும் தலைக்காட்ட தொடங்கினார்.

விமல் நடித்து வெளியான ‘தெய்வ மச்சான்’ படத்தில் விமலின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழ் நடிகை:

நேற்று வட சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனிதா சம்பத் அதுகுறித்து தைரியமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “என்னுடைய அம்மா வீடு நார்த் மெட்ராஸ்தான். எப்போ அங்க போனாலும் நல்ல வைபா இருக்கும். ஆனா இன்னைக்கு ஒரு அரசியல் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சார் அங்க வெச்சு கொல்லப்பட்டிருக்கார்.

இது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. ஒரு பெரிய அரசியல் தலைவருக்கே பாதுகாப்பு இல்லைன்னா, எங்கள மாதிரி சாதாரண ஆட்கள் எப்படி நிம்மதியா இங்க வாழ முடியும்ணு தெரியல.

பயமா இருக்கு:

எலெக்சன் டைம்ல நான் வேலை முடிச்சு வந்தப்போ என்னோட பேக் மொதக்கொண்டு எல்லாத்தையும் சோதனை பண்ணினாங்க. அந்தளவு சாதாரண மக்களை சோதனை பண்றவங்க, இவ்வளவு ஆயுதங்கள் வெச்சிருந்த ரவுடிகளை எப்படி பாக்காம விட்டாங்க. இது திடீர்னு நடந்த கொலை இல்ல.

திட்டமிட்ட படுகொலை. இதுல பொய்யா சில பேர் தானா வந்து ஆஜர் ஆகுறாங்க. அவங்கதான் கொலை பண்ணாங்கன்னு எப்படி நம்புறது” என அடுக்கடுக்காக பல கேள்விகளை அந்த வீடியோவில் எழுப்பியுள்ளார்.

மேலும் கொலை செய்பவர்களுக்கு அதற்காக கிடைக்கும் பணத்தில் எப்படி நிம்மதியாக வாழ முடிகிறது என கேள்வி எழுப்பிய அவர், திருந்தும் எண்ணம் இருந்தால் தான் நல்ல வேலை வாங்கி தருவதாகவும் பேசியுள்ளார்.

அவரது பேச்சுக்கு கமெண்ட் செய்துள்ள பலர், எந்த அரசியல் கட்சிகள் மீதும் பயம் இல்லாமல், நியாயத்தை தைரியமாக பேசியுள்ளதாக அனிதா சம்பத்தை புகழ்ந்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version