படுக்கயறை காட்சியில் நடிக்கும் போது என் உணர்வு இப்படித்தான் இருந்துச்சு.. வெக்கமின்றி ஓப்பனாக சொன்ன அஞ்சலி..!

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று இரண்டு சினிமா துறையிலுமே அதிக பிரபலமான ஒரு நடிகையாக நடிகை அஞ்சலி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தமிழில் மட்டும் நடித்து வந்த அஞ்சலி மிக தாமதமாகதான் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

தற்சமயம் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வரவேற்புகள் கிடைக்க துவங்கியிருக்கின்றன. அதனை தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் சிறப்பாக நடித்து வருகிறார் அஞ்சலி. அஞ்சலி ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தெலுங்கு தேசத்தை சேர்ந்த அஞ்சலி தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் அஞ்சலியின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்று கூறலாம். முதலில் அவர் நடித்த கற்றது தமிழ் என்கிற திரைப்படம்.

இரண்டு முக்கிய படங்கள்:

மற்றொன்று அவர் நடித்த அங்காடி தெரு என்கிற திரைப்படம். இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. மொத்த திரைப்படமும் கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் நகராது என்கிற நிலை இருந்தது.

அந்த ஒரு காரணத்தினால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்தார் அஞ்சலி. ஆனால் அதற்குப் பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் நிறைய பிரச்சனைகள் அஞ்சலிக்கு ஏற்பட்டது. நிறைய கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

அதன் மூலம் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மேலும் அஞ்சலியின் உடல் எடை அதிகரித்ததும் அவருக்கு வாய்ப்புகள் குறைவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கலகலப்பு மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே அஞ்சலியின் உடல் எடை அதிகரித்து இருந்தது.

வாய்ப்பை இழந்த அஞ்சலி:

இதனால் பார்ப்பதற்கு அதிக வயதான தோற்றத்தில் தெரிய தொடங்கினார் அஞ்சலி. சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கிய பிறகு உடல் எடையை குறைப்பதில் அதிக கவனம் செலுத்தினார் அஞ்சலி. உடல் எடையை குறைத்த  உடனே தெலுங்கு சினிமாவில் ஒரு ஐட்டம் பாடலில் என்ட்ரி கொடுத்தார் அஞ்சலி.

அந்த பாடலில் அவர் ஆடிய ஆட்டத்திற்கு வெகு சீக்கிரத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலுமே அவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது இந்த நிலையில் தற்சமயம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வரவேற்பை பெற்று நடித்து வருகிறார் அஞ்சலி.

இதற்கு நடுவே டிவி சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி சமீபத்தில் இவர் நடித்து வரும் பஹிஷ்கரனா என்னும் சீரிஸில் அவருக்கு நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது ஆமாம் அது உண்மைதான் பஹிஷ்கரனா தொடரில் நெருக்கமான காட்சியில் நான் நடிக்க வேண்டி இருந்தது. அப்பொழுது அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டுதான் அந்த காட்சியை படமாக்கினார்கள் ஆனாலும் கூட அந்த காட்சியில் நடித்த பொழுது எனக்கு கூச்சமாகவும் டென்ஷனாகவும் இருந்தது என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version