சிம்ரனுக்கு டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்..! இடுப்பின் நெளிவை பார்த்து வெடவெடத்து போன ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகை என்பதாலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அதிதி ஷங்கர். ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் தமிழில் எவ்வளவு பெரிய இயக்குனர் என்பது பலரும் அறிந்த விஷயமே.

மற்ற மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலர் இருப்பது போல தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரே இயக்குனர் ஷங்கர் மட்டும்தான். இயக்குனர் ஷங்கரை தவிர அவர் அளவிற்கு அதிகபட்ஜெட்டில் வேற எந்த ஒரு இயக்குனரும் இங்கு படம் இயக்குவது கிடையாது.

அதிதி ஷங்கர்

படத்திற்கு அதிகபட்ச செலவாகவில்லை என்றாலும் கூட பாடலுக்கு அதிக செலவுகளை செய்து பட்ஜெட்டை இழுத்து விடுவார் ஷங்கர் என்று ஒரு பக்கம் அவரை குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன. நண்பன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் அந்த பார்முலாவை அவர் பின்பற்றவும் செய்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மகளான அதிதி ஷங்கர் வெகு நாட்களாக சினிமாவிற்கு வராமல்தான் இருந்து வந்தார். முதலில் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாமல் தான் இருந்து வந்தது. ஏனெனில் பொதுவாக ஆர்வம் இருக்கும் நடிகைகள் இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்து விடுவார்கள்.

சிம்ரனுக்கு டஃப்

ஆனால் அதிதி ஷங்கரை பொருத்தவரை மிக தாமதமாகதான் சினிமாவிற்கு அவர் வந்தார். ஷங்கரின் மகள் என்பதாலேயே எடுத்த உடனே பெரிய பெரிய படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் இயக்குனர் முத்தையா இயக்கிய விருமன் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக களமிறங்கினார் அதிதி ஷங்கர்.

இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதிதி ஷங்கருக்கு அந்த படத்தில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. மேலும் அதில் ஒரு பாடலும் அவர் பாடியிருந்தார்.

இடுப்பின் நெளிவை பார்த்து:

பொதுவாகவே பாடல்கள் பாடுவது என்பது அதிதி ஷங்கருக்கு பிடித்த விஷயமாகும். இதனாலேயே விருமன் படத்தில் அவர் ஒரு பாடலை பாடி இருந்தார் விருமன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த படத்திற்கு பிறகு இன்னும் சில திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று தற்சமயம் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிம்ரன் நடனமாடி மிகவும் புகழ்பெற்ற பாடலான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதிதி ஷங்கர்.  அதில் அவர் சிம்ரனை தாண்டி யாரும் ஆட முடியாது என பதிவிட்டுள்ளார்.

பாடுவதை தாண்டி நடனத்திலும் இவ்வளவு கை சேர்ந்தவர் அதிதி ஷங்கர் என்பது இந்த வீடியோ மூலமாக தெரிந்துள்ளது. பலரும் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version