இது ரெண்டும் ஒன்னா.. அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை.. தீயாய் பரவும் மீம்கள்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோலிவுட் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அதுல்யா ரவி. கோயம்புத்தூரை சேர்ந்த அதுல்யா ரவி கல்லூரி முடித்த உடனேயே சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்தார்.

இவரது உண்மையான பெயர் திவ்யா என்பதாகும். ஆனால் இந்த பெயர் மிகவும் சாதாரணமாக இருப்பதால் தன்னுடைய பெயரை சினிமா துறைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டார். இவர் காதல் கண் கட்டுதே என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார் அதுல்யா ரவி.

அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருந்தது. ஓரளவு பேசப்படும் திரைப்படமாகவும் இருந்தது. அந்த திரைப்படத்தில் மிகவும் இளமையுடன் காணப்படுவார். அதற்குப் பிறகு அவருக்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்தது.

முதல் பட வாய்ப்பு:

ஏனெனில் அவர் நடித்திருந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தது. தொடர்ந்து கதாநாயகன் என்கிற  விஷ்ணு விஷால் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் துணை கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு கொஞ்சம் பிரபலமான திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

ஜீவா நடித்த தீ சமுத்திரகனி நடித்த அடுத்த சாட்டை மாதிரியான திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றார் நாடோடிகள் 2. திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்போதும் அதுல்யா ரவி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வரும் மாதிரியாக நிறைய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இதற்கு நடுவே தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் மீட்டர் என்கிற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த வருடம் அவரது நடிப்பில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.

முகத்தில் மாற்றம்:

இந்த நிலையில் ஆரம்பத்தில் அதுல்யா ரவி சினிமாவிற்கு வந்தபோது அவரது முகம் இருந்ததற்கும் இப்பொழுது அவர் முகம் இருப்பதற்கும் இடையே மாற்றங்கள் தெரிவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

 

பெரும்பாலும் சினிமாவிற்கு வரும் நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதன் மூலம் அவர்களது முக அமைப்பு மாற்றிக்கொள்வது உண்டு. அந்த மாதிரி அதுல்யா ரவியும் அவரது முகத்தை மாற்றி இருக்கிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன.

இதற்கு பதிலளித்த அதுல்யா ரவி கூறும் பொழுது நான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொள்ளவில்லை. தினமும் யோகா செய்கிறேன் அதனால் தான் எனது முகம் மாறி உள்ளது என்று கூறுகிறார். இதற்கு பதில் அளித்த ரசிகர்கள் யோகா செய்தால் முக அழகு மாறிவிடுமா இரண்டிற்கும் என்ன தொடர்பு உடல் சம்பந்தப்பட்ட பயிற்சி தானே யோகா என்று கூறி அவரது பழைய புகைப்படத்தையும் புதிய புகைப்படத்தையும் மீம்ஸாக ரெடி பண்ணி ஷேர் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version