Big B**** Girlன்னு என்னை சொல்லுவாங்க.. உடைத்து பேசிய திவ்ய பாரதி..!

கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்டவர் நடிகை திவ்ய பாரதி. இன்னமும் தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகிகள் லிஸ்டில் இவர் வரவில்லை என்றாலும் கூட தொடர்ந்து அதற்காக போராடி வருகிறார். 2021 ஆம் ஆண்டு வெளியான பேச்சிலர் திரைப்படம் மூலமாக இவர் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திலேயே முத்த காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அவருக்கு அதிகமாகவே இருந்து வந்தன. இந்த நிலையில் முதல் படமே நின்னு பேசும் படமாக அமைந்ததால் அடுத்தடுத்து எளிமையாக வரவேற்பை பெற துவங்கினார் திவ்ய பாரதி.

சினிமாவில் வாய்ப்பு:

அதனை தொடர்ந்து தற்சமயம் மதில் மேல் பூனை, மகாராஜா விஜய் நடிக்கும் கோட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி. திவ்ய பாரதியின் உடல் அமைப்பு அழகாக இருப்பதால் அதுக்குறித்து பல விதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

முக்கியமாக அறுவை சிகிச்சை செய்துதான் உடல் அமைப்பை இப்படி மெயிண்டைன் செய்கிறார் திவ்யபாரதி என ஒரு பேச்சி இருந்து வருகிறது.இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் திவ்யபாரதி. அதில் அவர் கல்லூரியில் இறுதி நாட்களில் மாணவர்கள் கொடுக்கும் ஸ்லாம் புக்கின் பக்கத்தை பகிர்ந்திருந்தார்.

உடல் குறித்து வந்த கமெண்ட்:

அதில் அவர் கூறும்போது ”இந்த பதிவின் மூலமாக எதையும் விளக்கவோ நிரூபிக்கவோ நான் விரும்பவில்லை. உங்களிடம் இருக்கும் குறைகளை நீங்கள் பலமாக நினைக்கவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு, சமீப காலங்களாக எனது இடுப்பு பெரிதாக இருப்பதற்காக நான் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டேன்.

அதன் மூலமாகதான் எனது உடல் வடிவத்தை மெயிண்டெயின் செய்கிறேன் என கருத்துக்களை பகிர்கிறார்கள். ஆனால் கல்லூரி நாட்களிலேயே என்னை பேண்டா பாட்டில் மற்றும் ‘பிக் பட் கேர்ள்’ என மோசமாக அழைத்திருப்பதை இங்கு பதிவிட்டிருக்கிறேன்.

என் வகுப்பு நண்பன் ஒருவன் என் உடல் அமைப்பை கேலி செய்ததை எனது ஸ்லாம் புக்கில் பார்க்க முடியும். ஆனால் இயற்கையாகவே எனது இடுப்பு எழும்பு கொஞ்சம் பரந்துதான் இருக்கிறது. இதனால் சில காலங்களில் எனது உடல் மீது எனக்கே வெறுப்பு வர துவங்கியது.

அப்போது யாராவது எனக்கு ஆறுதல் சொல்லா மாட்டார்களா என ஏங்கியுள்ளேன். எனவே உங்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் குறைகளை கண்டு நீங்கள் வெறுப்படைய தேவையில்லை. அதை நீங்கள் நேசியுங்கள்.” என தக்க விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை திவ்ய பாரதி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version