பிரபல Youtuber-ஐ திருமணம் செய்யும் சுனைனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அறிமுகமான முதல் திரைப்படமே அவருக்கு நல்ல திரைப்படமாக அமைந்தது.

காதலில் விழுந்தேன் திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தபொழுது அது தயாரித்த முதல் திரைப்படம் என்பதால் சன் நெட்வொர்க் சேனல்கள் அனைத்திலும் அதிகமான விளம்பரத்திற்கு உள்ளானது காதலில் விழுந்தேன் திரைப்படம்.

அந்த விளம்பரங்களை மக்கள் பார்த்து பார்த்து அவர்களுக்கு சுனைனாவின் முகம் பழகிவிட்டதால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட சுனைனா அனைவரும் அறிந்த ஒரு நடிகையாக மாறிவிட்டார் அதற்கு பிறகு அவர் மாசிலாமணி நீர்ப்பறவை என்று நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சீக்கிரம் வளர்ந்த நடிகை:

வந்த சில காலகட்டங்களிலேயே வளர்ந்து வரும் ஒரு நடிகையாக ஆனார் சுனைனா பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

பிறகு சில ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்புகள் என்பதே சினிமாவில் இல்லாமல் இருந்து வருகின்றன. இதற்கு இடையே ஒரு வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்தார் சுனைனா. அந்த சீரியஸிற்குமே பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் மட்டும் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற விஷயங்களை செய்து வந்தார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஒரு நடிகை 10 வருடம் வரவேற்பை பெற்று இருப்பது என்பதே கடினமான விஷயமாக இருந்து வருகிறது.

மார்க்கெட் இழப்பு:

தொடர்ந்து அவர்கள் வெற்றி படங்கள் மூலமாகவும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமாகவும் மட்டுமே தங்களுக்கான மார்க்கெட்டை அவர்கள் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை இருக்கிறது.

ஆனால் சுனைனாவை பொருத்தவரை அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் இல்லை. பெரிய நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை அதனால் அவருக்கான மார்க்கெட் என்பது வெகு சீக்கிரமாகவே குறைந்துவிட்டது.

இந்த நிலையில் சினிமாவிலிருந்து விலகி இருக்கும் சுனைனா தற்சமயம் துபாயை சேர்ந்த பிரபல யூட்யூப்பர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயை சேர்ந்த பிரபல யூட்யூப்பரான காலித் அல் அமேரி என்பவருக்கும் சுனைனாவுக்கும்  நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் சுனைனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version