கேரவேனில் என்னுடைய தாய்ப்பாலை எடுத்து இதை செய்தேன்.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து மார்க்கெட்டை பிடித்த ஒரு சில நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர்.

இவர் முதன்முதலாக 2004 ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் அவருக்கு இந்தியில் அவ்வளமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பொதுவாகவே கதாநாயகிகளுக்கு எடுத்தவுடன் ஹிந்தியில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காது. அதனை தொடர்ந்து முயற்சி செய்ய தொடங்கினார் காஜல் அகர்வால். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் தமிழில் பழனி என்கிற திரைப்படம் வெளியானது.

தமிழில் அறிமுகம்:

இந்த திரைப்படம் மூலமாகதான் முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த மகதீரா திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையை மாற்றி போட்ட திரைப்படம் என்று கூறலாம்.

அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற தொடங்கினார் காஜல் அகர்வால். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்த காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் இப்பொழுதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் காஜல் அகர்வால்.

படப்பிடிப்பில் சிக்கல்:

அதில் அவர் கூறும்பொழுது எனது குழந்தை பிறந்து இரண்டு மாதங்களிலேயே எனக்கு திருப்பதியில் ஒரு படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டி இருந்தது. அந்த படப்பிடிப்பு நடக்கும் இடமானது மிகவும் வெப்பமான இடம் ஆகும்.

அங்கே எனது குழந்தையை அழைத்து நான் செல்ல முடியாது. இந்த நிலையில் நான் எனது தாய் மற்றும் வேலையாட்களிடம் குழந்தையை கொடுத்து ஒரு வீட்டில் தங்க வைத்துவிட்டு படப்பிடிப்பிற்கு கிளம்பி வந்தேன். படப்பிடிப்பில் கேரவனில் என்னுடைய தாய்ப்பாலை எடுத்து அதை டிரைவரிடம் கொடுத்து குழந்தைக்கு அனுப்பி வைப்பேன்.

இரண்டு மணி நேரத்தில் அங்கு செல்லும் டிரைவர் அதை குழந்தைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கிளம்பி படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். பிறகு மீண்டும் நான் தாய்ப்பாலை சேகரித்து அவரிடம் கொடுப்பேன்.

இதற்கு நடுவே அந்த தாய்ப்பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதனை ஐஸ் பெட்டிக்குள் வைத்து வாகனத்தில் கொடுத்து விடுவேன். இப்படியாக எட்டு மணி நேரம் ஒரு நாளைக்கு எனது ஓட்டுநர் தாய்ப்பாலுக்காக காரை ஓட்டிக் கொண்டே இருப்பார்.

ஏனெனில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது அவ்வளவு முக்கியமான ஒன்று. அவர்கள் ஆயுட்காலம் முழுக்க அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஒரு விஷயமாக தாய்ப்பால்தான் இருக்கும் என்பதால் அனைத்து தாய்மார்களும் அந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version