பதின்ம வயதில் பருவமொட்டாக கவர்ச்சி உடையில் நடிகை கோவை சரளா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நகைச்சுவை நடிகர்களை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள் எக்கச்சக்கமாக உண்டு. ஆனால் நகைச்சுவை செய்யும் பெண் நடிகைகள் என்று பார்த்தால் மிகக் குறைவாகதான் இருப்பார்கள்.

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து மனோரமா, சச்சு மாதிரியான ஒரு சில பெண்கள் மட்டும் தான் காமெடி கதாபாத்திரமாக தொடர்ந்து நடித்து வந்திருக்கின்றனர்.

காமெடி நடிகையாக எண்ட்ரி:

அந்த வரிசையில் அடுத்து ஒரு காமெடி நடிகையாக வந்தவர்தான் கோவை சரளா வெள்ளி ரத்தினம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கோவை சரளா. தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள் தம்பிக்கு எந்த ஊரு போன்ற திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

அதற்கு பிறகு அவருக்கான வாய்ப்புகள் என்பது அதிகரித்தது. 1984 இல் வெறும் 4 திரைப்படங்கள்தான் அவர் நடிப்பில் வெளியாகியிருந்தது. ஆனால் 1985இல் எட்டு திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வெளியானது. தொடர்ந்து முக்கால்வாசி திரைப்படங்களில் காமெடி நடிகையாக இவர்தான் இருந்தார்.

கரகாட்டக்காரன் திரைப்படம் இவரது நடிப்பில் வந்த படங்களில் முக்கியமான திரைப்படம் ஆகும். பெரும்பாலும் கவுண்டமணி செந்தில் ஆகியோருடன்தான் சேர்ந்து நடித்து வந்தார் கோவை சரளா. பிற்காலங்களில்தான் அவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க துவங்கினார்.

வடிவேலுவுடன் காம்போ:

இயக்குனர் வி.சேகர் திரைப்படங்களில் பெரும்பாலும் அவர் கோவை சரளாவிற்கு ஜோடியாக வடிவேலுவைதான் நடிக்க வைப்பார். அந்த காம்போ நல்ல வெற்றியையும் கொடுத்தது. அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் வடிவேலுவும் கோவை சரளாவும் சேர்ந்து நடிக்க தொடங்கினர்.

இப்போது வரையில் தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகையாக மின்னி வருகிறார் கோவை சரளா. நிறைய திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

இளமை காலங்களில் இவர் மிகவும் அழகாக இருந்தார். கிட்டத்தட்ட அவருக்கு நடிகை ஆவதற்கான தகுதிகள் இருந்தது என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் அப்பொழுது சில போட்டோ ஷூட்களை எடுத்து அதை சில இயக்குனர்களுக்கும் கொடுத்து இருக்கிறார்.

ஆனாலும் அவருக்கு பெரிதாக கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது போட்டோக்கள் திடீரென சமீபத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் பார்க்கும் பொழுது உண்மையிலேயே நடிகை கோவை சரளா கதாநாயகி ஆவதற்கான தகுதி பெற்றவர்தான் என்று கூறி அந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version