வீட்டில் நிறைய சண்டை வரும்.. ஆனா.. இது தான் நடந்ததே இல்ல.. நடிகை குஷ்பூ ஓப்பன் டாக்…!

ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ. ஸ்ரீதேவிக்கு பிறகு குஷ்பூ மாதிரியே எனக்கு மனைவி வேண்டும் என்று கேட்ட இளைஞர்கள் தமிழ்நாட்டில் அதிகம். அந்த அளவிற்கு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் குஷ்பூ

80 களில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக குஷ்பூ இருந்தார். தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் அவருக்கென பெறும் ரசிக்கப்பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் குஷ்பூ. தமிழ் சினிமாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையை பெற்றவரும் குஷ்பூதான்

தமிழில் வந்த மார்க்கெட்:

வட இந்தியாவை சேர்ந்த குஷ்பூ தமிழே தெரியாமல்தான் தமிழில் நடிப்பதற்கு வந்தார். அவருக்கு சிறு வயது முதலே திரைப்படங்களின் மீது ஆர்வம் இருந்து வந்தது. தமிழில் அவர் நடித்த திரைப்படங்களில் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் சின்னத்தம்பி.

சின்னதம்பி திரைப்படத்திற்கு பிறகு குஷ்பூ தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் சுந்தர் சி இயக்கிய முறைமாமன் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கும் சுந்தர் சிக்கும் இடையே காதல் உண்டானது.

அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் பெரும்பான்மையான பிரபலங்கள் போல விவாகரத்து செய்து கொள்ளாமல் இப்போது வரை வெற்றிகரமாக தம்பதிகளாக இருந்து வருகின்றனர் குஷ்பூ சுந்தர் சி தம்பதியினர்.

இவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். திரையில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற குஷ்பூ ஒரு காலகட்டத்திற்கு பிறகு வரவேற்பை இழக்கத் தொடங்கினார். புதிய நடிகைகளுக்கு அதிக வரவேற்பு வர துவங்கியதால் இவருக்கு வரவேற்பு என்பது குறைய தொடங்கியது.

அரசியலில் எண்ட்ரி:

அதனை தொடர்ந்து அரசியலில் ஆர்வம் காட்டத் துவங்கினார் குஷ்பூ. ஆரம்ப கட்டத்தில் தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் துவங்கிய குஷ்பூ பிறகு காங்கிரஸ் கட்சியில் சென்று சேர்ந்தார். அங்கும் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் தற்சமயம் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் குஷ்பூ.

சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த குஷ்பூ தற்சமயம் மீண்டும் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான சுவாரஸ்யமான சில விஷயங்களை கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது எனக்கும் சுந்தர்சிக்கும் திருமணமான பிறகு அவருடைய அம்மா என்னுடனே இருக்க வேண்டும் என்று நான் கூறினேன் ஆனால் அவரோ இருவருக்கும் சண்டை அதிகமாக வரும் என்று கூறினார். அதற்கு நான் பரவாயில்லை உங்களது அம்மா என்ன செய்தாலும் நான் அனுசரித்துக் கொள்வேன் என்று கூறினேன்.

ஆனால் சுந்தர் சி சொன்ன மாதிரியே பிறகு எங்களுக்குள் நிறைய சண்டைகள் வந்தது. ஆனால் எப்போதும் எங்களை விட்டு பிரிந்ததில்லை எங்களது மாமியார். அதேபோல எங்கேயும் எங்களை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்.

சில நேரம் சண்டைகள் வரும் பொழுது நீங்கள் கோயம்புத்தூர் சென்று விடுங்கள் என்று நான் எனது மாமியாரிடம் சத்தம் போட்டு உள்ளேன். ஆனால் அவர் சென்றதே இல்லை அதேபோல யாராவது எனது மாமியார் கிட்ட வந்து உனது மருமகள் என்ன இப்படி பேசுகிறாளே என்று கேட்டால் அவர்களை தான் சத்தம் போடுவார் எனது மாமியார் என்று கூறுகிறார் குஷ்பூ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version