ஆன்லைனில் 100000 ரூபாய்க்கு அதை ஆர்டர் செய்த மாளவிகா..! இறுதியில் நடந்த கூத்து..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வந்தவர்தான் நடிகை மாளவிகா. ஒரு காலகட்டங்களில் நடிகை மாளவிகாவிற்கு நயன்தாரா போலவே பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது என்று கூறினால் இப்போது இருக்கும் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இது இருக்கும்.

ஆனால் ஒரு வகையில் அது உண்மைதான். வெற்றி கொடி கட்டு  மாதிரியான திரைப்படங்களில் அவர் நடித்த பொழுது அவருக்கான ரசிக்கப் பட்டாளம் பெரிதாகதான் இருந்தது. பெங்களூரை சேர்ந்த மாளவிகாவின் நிஜ பெயர் ஸ்வேதா கொண்ணூர்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலாக தமிழில்தான் இவர் நடிகையாக அறிமுகமானார். இயக்குனர் சுந்தர் சிதான் இவரை முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

தமிழில் அறிமுகம்:

அப்பொழுது சுந்தர் சி இவருக்கு வைத்த பெயர்தான் மாளவிகா. பிறகு அதுவே அவரது பெயராக மாறியது. உன்னை தேடி திரைப்படத்தை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் மாளவிகா.

மாளவிகாவிற்கு வெற்றிக்கொடி கட்டு, சீனு போன்ற திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்களாக அமைந்தன. அந்த திரைப்படங்கள் அவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தன. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார்.

ஆரம்பத்தில் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்து கொண்டிருந்த மாளவிகா போகப்போக வெற்றி பெறாத கதைகளில் எல்லாம் கதாநாயகியாக நடித்தார். இதனால் அவரது மார்க்கெட் குறைய தொடங்கியது.

எதிர்மறை விமர்சனம்:

இந்த நிலையில் திருட்டுப் பயலே திரைப்படம் இவருக்கு ஒரு எதிர்மறையான விமர்சனத்தை பெற்று கொடுத்தது. ஏனெனில் அப்படியான ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் மாளவிகா.

தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இந்த நிலையில் 2009 வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார் மாளவிகா. இருந்தாலும் நிறைய சின்ன சின்ன நிகழ்ச்சிகளிலும் விளம்பரங்களிலும் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவரிடம் பேட்டியில் பேசும்பொழுது நீங்கள் வாங்கியதிலேயே ஒரு பொருள் தேவையில்லாமல் முட்டாள்தனமாக வாங்கியது என்றால் எதை கூறுவீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மாளவிகா, ”ஆன்லைனில் ஒரு ஷூ வாங்கினேன் அதுதான் எனது வாழ்க்கையிலே மோசமான விஷயம் என்று கூறினார். அந்த ஷூவின் விலை என்னவென்று கேட்டால் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். அந்த ஷூவின் விலை ஒரு லட்ச ரூபாயாம்.

அதைப்பற்றி கூறும் மாளவிகா ஒரு விளம்பரத்தில் நடித்ததற்காக அந்த ஒரு லட்ச ரூபாய் எனக்கு கிடைத்தது. உடனே அந்த ஷூவை வாங்கினேன் ஆனால் அது கால்களுக்கு கம்ஃபர்ட்டாகவே இல்லை. அது நான் செய்த பெரிய முட்டாள்தனம் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார் மாளவிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version