இந்த உறுப்பை கடிச்சு.. அதை செய்ய சொன்னார்.. முடியாதுன்னு மறுத்தேன்.. 90ஸ் கனவுகன்னி மோகினி பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் குறைவான திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை மோகினி.

1990களில் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் பலருக்கும் மோகனியை தெரிந்திருக்கும். தமிழில் ஈரமான ரோஜாவே என்கிற திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார் நடிகை மோகினி.

அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் ஒவ்வொரு திரைப்படத்தில் நடித்தார் மோகினி. எல்லா மொழிகளிலும் அவருக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு 1992ல் இவரது நடிப்பில் நாடோடி பாட்டுக்காரன் என்கிற திரைப்படம் வெளியானது.

தமிழில் வெற்றி படங்கள்:

இந்த திரைப்படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்தார். அப்போதெல்லாம் கார்த்திக், மோகன் மற்றும் நடிகர் ராமராஜன் போன்ற நடிகர்கள் பாட்டு பாடுபவர்களாகதான் அதிகமாக நடிப்பார்கள். அந்த திரைப்படங்களும் பெரிய ஹிட் கொடுத்து வந்தது.

அதனால் தொடர்ந்து கார்த்திக் இதே மாதிரி நிறைய திரைப்படங்களில் கையில் இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு பாடல் பாடுபவராக நடித்திருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் நாடோடி பாட்டுக்காரன் நல்ல வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து 1992 இல் மட்டும் நடிகை மோகினி நடிப்பில் நிறைய திரைப்படங்கள் தமிழில் வெளியானது. உனக்காக பிறந்தேன், உன்னை வாழ்த்தி பாடுகிறேன், சின்ன மருமகள், தாய்மொழி போன்ற திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களிலும் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

கவர்ச்சி பாடல்:

மேலும் அவர் நடித்த திரைப்படங்களில் புதிய மன்னர்கள், நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. இப்பொழுதும் இந்த திரைப்படங்களை பார்ப்பதற்கு ஒரு ரசிக்கப்பட்டாளம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு பாடல் காட்சியை எடுத்த அனுபவத்தை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் நடிகை மோகினி. அதில் அவர் கூறும் பொழுது புதிய மன்னர்கள் திரைப்படத்தில் வரும் பிரபலமான பாடலாக ”நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி” என்கிற பாடலை படமாக்கும் பொழுது நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் தான் படப்பிடிப்பு தளத்தில் நடனம் ஆடுவதற்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது பாடலில் ஒரு காட்சியில் நான் உதட்டை கடித்துக் கொண்டு ரசிகர்களை நோக்கி சொக்க வைக்கும் பார்வை ஒன்றை வீச வேண்டும் உதட்டை கடித்து சுழித்தபடி ரசிகர்களை நோக்கி மோக பார்வையை வீசுவது போன்ற காட்சி எல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது. இதற்கு முன்பும் அப்படியான காட்சிகளில் நான் நடித்ததில்லை.

ஆனாலும், அந்த காட்சியை படிப்படியாக எனக்கு சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். நானும் உதட்டை கடித்துக் கொண்டு பாதி கண்களை மூடிக்கொண்டு ரசிகர்களை பார்ப்பது போல் கேமரா முன்பு நடித்தேன். இதை பார்த்துவிட்டு ஏதோ போன்வீட்டா ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு உதட்டை துடைப்பது போல இப்படி செய்கிறாயே என்று என்னை திட்டினார். அதன் பிறகு பொறுமையாக எனக்கு சொல்லிக் கொடுத்து அந்த காட்சியை படமாக்கினார். நான் முடியவே முடியாது என மறுத்தேன். இருந்தாலும் அதை செய்யச் சொன்னார். ஒரு வழியாக செய்து முடித்தேன் என பேசி இருக்கிறார் நடிகை மோகினி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version