அந்த உறுப்பு பெருசா இருக்கு.. இப்படி கமெண்ட் பன்றாங்க.. நீலிமா ராணி வேதனை..!

பள்ளி படிக்கும் காலம் முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வந்தவர்தான் நடிகை நீலிமா ராணி. இவர் குழந்தை நட்சத்திரமாகவே நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலாக 1992 இல் வந்த  தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் போன்ற திரைப்படங்களில் எல்லாம் இவர் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் அவ்வளவாக மக்கள் மத்தியில் பதிவாக மாட்டார்கள். ஆனால் நீலிமா ராணியை பொருத்தவரை அவரை மக்கள் பலருக்கும் தெரியும் என்று கூறலாம்.

சிறு வயது முதலே வரவேற்பு:

ஏனெனில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிறைய சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். மெட்டி ஒலி மாதிரியான பிரபலமான சீரியல்களில் நடித்து இருந்ததால் இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்தது. பிறகு நடுவே சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, மொழி மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை எடுத்து நடித்திருந்தார் நீலிமா ராணி.

Actress Neelima Rani Photo shoot Images

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இப்போதும் கூட ஒரு முக்கியமான துணை கதாபாத்திரம் வேண்டுமென்றால் அதற்கு நீலிமா ராணியைதான் நடிக்க வைக்கின்றனர். போன வருடம் வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட திரைப்படத்தின் கதையை மாற்றி அமைக்கும் கதாபாத்திரமாக அது அமைந்திருந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று வருகிறார் நீலிமா ராணி. தமிழ் திரை உலகில் பிரபலமாக இருக்கும் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு கூட தொடர்ந்து அவ்வளவு வரவேற்புகள் இருந்து வருவதில்லை.

தொடர்ந்து வாய்ப்புகள்:

சினிமாவில் அறிமுகமான காலகட்டம் முதல் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படத்திலாவது நீலிமா ராணி நடித்து விடுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது. அதே அளவுக்கு சீரியலிலும் அவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது.

தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார் நீலிமா ராணி.

அதில் அவர் கூறும் பொழுது சமூக வலைதளங்களில் என்னை மிகவும் மோசமாக விமர்சனம் செய்பவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு எனது உடல் எடை சற்று அதிகரித்துவிட்டது.

அதனை தொடர்ந்து வலைதளங்களில் சிலர் எனது மார்பகங்கள் பெரிதாக உள்ளன என என்னை கேலி செய்து வந்தனர் ஆனால் அதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்று கூறுகிறார் நீலிமா ராணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version