அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்.. ஆனா.. அது.. நடிகை ஓவியா வெளிப்படியான பேச்சு..!

களவாணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. ஓவியாவின் முதல் படம் என்பது அவருக்கு ஒரு சிறப்பான திரைப்படமாக அமைந்தது. களவாணி திரைப்படம் குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்றாலும் கூட தமிழக அளவில் பெரிதாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது.

மேலும் நடிகர் விமலின் மார்க்கெட்டையும் பெரிதாக உயர்த்தியது ஓவியாவை பொறுத்தவரை அந்த திரைப்படத்தில் பள்ளியில் படிக்கும் ஒரு கிராமத்து பெண்ணாகதான் அறிமுகமானார் ஓவியா. எனவே அப்படித்தான் மக்களும் அவரை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து வாய்ப்பு:

பிறகு ஓவியா வெவ்வேறு படங்களில் நடிக்கும் போது கவர்ச்சி காட்டி மாடர்ன் உடையில் நடிக்க தொடங்கினார். களவாணி திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக பார்த்த  ஓவியாவை மாடர்ன் உடையில் பார்க்கும் மக்களால் அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பதிலும் ஓவியா நிறைய கோட்டை விட்டார் அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கியது பொதுவாகவே வாய்ப்புகள் குறைந்தால் பல யுக்திகளை நடிகைகள் கையாள்வதுண்டு.

அதில் ஓவியா கையாண்ட யுக்தி என்றால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றபோது அதிகமாக பேசப்பட்ட ஒரு நடிகையாக ஓவியாதான் அப்போது இருந்து வந்தார். தொடர்ந்து ஏதாவது பிரச்சனை செய்வது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு சென்று கொண்டிருந்தார் ஓவியா.

பிக்பாஸிற்கு பிறகு வாய்ப்பு:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் ஓரளவு வந்தது இருந்தாலும். தொடர்ந்து மற்ற நடிகைகள் அளவிற்கு அவரால் பிரபலமாக முடியவில்லை. இந்த நிலையில் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஓவியா.

அதில் அவர் கூறும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் என்பது சினிமாவில் எல்லா தளங்களிலும் இருக்கதான் செய்கிறது நான் சினிமாவில் இருக்கும் அனைவருமே அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைக்கிறார்கள் என்று கூறவில்லை ஆனால் அப்படி அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.

உலகில் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன அப்படியான ஒரு வேலை தான் சினிமாவும், சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் வேறு வேலையை தேடிக்கொண்டு சென்றுவிடலாம் அதை விட்டுவிட்டு அட்ஜஸ்ட்மெண்டிற்கு பணிந்து போவது தவறு.

யாராவது அப்படி உங்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் துணிந்து அவர்களை குறித்து வெளியில் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் பயம் வரும். பிறகு எந்த பெண்ணிடமும் அப்படி கேட்க மாட்டார்கள். 18 வயது பெண்களாக சினிமாவிற்கு நடிக்க வரும்பொழுது அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஆனால் அவர்களை அப்பொழுதே தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பிறகு வயது ஆக ஆகதான் அவர்கள் பல விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது இருக்கும் பெண்கள் முன்பிருக்கும் பெண்களை விட தைரியமாக இருக்கிறார்கள் என்று கூறினார் ஓவியா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam