பேசுகிறேன்.. பேசுகிறேன்.. உன் இதயம் பேசுகிறேன்.. நடிகை பத்மப்பிரியா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை பத்மபிரியா. இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் வெற்றியை கொடுத்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது சினிமாவில் இவர் அவ்வளவாக நடிப்பது கிடையாது.

பத்மபிரியாவின் பூர்விகம் என்று பார்த்தால் அவர் டெல்லியை சேர்ந்தவராவார். பொதுவாகவே வட இந்தியாவில் பிறக்கும் நடிகைகள் பிறகு தென்னிந்தியாவிற்கு வந்துதான் வாய்ப்புகள் தேடுவார்கள். ஏனெனில் வட இந்தியாவில் நடிகையாவது என்பது கொஞ்சம் சிரமமாகும்.

தென்னிந்தியாவில் அறிமுகம்:

வாரிசு அரசியல் என்பது அங்கு அதிகமாக இருக்கின்றன. தொடர்ந்து வாரிசுகளின் பிள்ளைகள்தான் பிரபலமாகும் நிலை பாலிவுட்டில் இருந்து வருகிறது. இதனால் தென் இந்திய சினிமாவிற்கு நடிப்பதற்காக வந்தார் பத்மபிரியா.

தன்னுடைய எம்.பி.ஏ பட்டப்படிப்பை முடித்த உடனே அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் உண்டானது. அதற்கு முன்பே பன்னிரண்டாவது படிக்கும் பொழுதே இவர் பாடல்களை பாடி அதை மியூசிக் ஆல்பமாக வெளியிட்டும் இருந்தார். முதன் முதலாக சீனு வசந்தி லட்சுமி என்கிற தெலுங்கு திரைப்படத்தில்தான் அறிமுகமானார் நடிகை பத்மபிரியா ஜானகிராமன்.

அதற்கு பிறகு அவருக்கு தெலுங்கை விடவும் மலையாளத்தில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது. 2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் இவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. அதை தொடர்ந்து தமிழிலும் இவரது நடிப்பில் தவமாய் தவமிருந்து திரைப்படம் வெளியானது.

சேரன் படத்தில் வாய்ப்பு:

இயக்குனர் சேரன் இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் சிறப்பான திரைப்படமாக உருவான தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் சேரனுக்கு மனைவியாக நடித்திருந்தார் நடிகை பத்மபிரியா ஜானகிராமன்.

அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் அவர் பெற்றார். அதற்கு பிறகு தமிழில் பட்டியல் என்கிற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடித்த ஒரு திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மீண்டும் ஒருமுறை பெற்றார் நடிகை பத்மபிரியா ஜானகிராமன். பத்மபிரியாவை பொறுத்தவரை தேர்ந்தெடுத்துதான் திரைப்படங்களில் நடிப்பார்.

அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் சிறப்பான கதாபாத்திரமாக இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரியான நடிப்பையும் வெளிப்படுத்தி அசத்தி விடுவார் நடிகை பத்மபிரியா ஜானகிராமன். தமிழில் மிருகம், சத்தம் போடாதே, பொக்கிஷம் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கூட நான்கு விருதுகளை வாங்கி இருக்கிறார். ஒரு தேசிய விருதையும் வாங்கி இருக்கிறார் நடிகை பத்மபிரியா  ஜானகிராமன். இப்படி எல்லாம் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய பத்மபிரியா 2017க்கு பிறகு பெரிதாக நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பிறகு 2022-ல் இவருது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் மட்டும் வெளியானது. இந்த நிலையில் இப்போது எப்படி இருக்கிறார் பத்மபிரியா ஜானகிராமன் என்று பலரும் தேடிக் கொண்டிருக்கும் பொழுது அவரது தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வருகின்றன.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version