என்னோட ப்ரா சைஸ் என்ன..? அதை தெரிஞ்சே தான்பண்ணேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒரே போடு..!

சின்ன திரையில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் செய்தி தொகுப்பாளராகவும் இருந்து வந்தவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். பெரும்பாலும் திரைத்துறைக்கு சின்னத்திரையில் இருந்து வரும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஆனால் நடிகைகளின் எண்ணிக்கை என்பது குறைவாகவே இருக்கும். சீரியல் நடிகைகள் எல்லாமே அவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று விட முடியாது. அப்படி வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர்.

பிரியா பவானி சங்கர் சிறு வயது முதலே  திரையில் தோன்றி மக்கள் மத்தியில் பிரபலமாவதன் மீது ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் கல்லூரி படித்த உடனையே செய்தி தொகுப்பாளராக வாய்ப்பைப் பெற்று செய்தி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார்.

ப்ரியா பவானி சங்கர் எண்ட்ரி:

அதற்கு பிறகுதான் அவருக்கு சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க துவங்கிய பிரியா பவானி சங்கருக்கு மேயாத மான் திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடித்த மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தின் கதையே பிரியா பவானிசங்கரை சுற்றிதான் செல்லும் என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் பிரியா பவானி சங்கர்.

இந்த நிலையில் தன்னுடைய ப்ரா சைஸ் என்ன என்று கேட்ட ரசிகருக்கு அது குறித்து சரியான பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். பொதுவாகவே பிரியா பவானி சங்கர் கொஞ்சம் தைரியமான ஒரு பெண் என்று கூறலாம்.

சரியான பதிலடி:

அவரிடம் எந்தவிதமான சர்ச்சை கேள்விகளை கேட்டாலும் அதற்கு முகத்தில் அடித்தார் போல பதில் சொல்லக்கூடியவர் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுடைய பிரா சைஸ் என்ன என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு என்ன சைஸ் என்று கூறிய பிரியா பவானி சங்கர் நான் ஒன்றும் இந்த உள்ளாடையை வேற்று கிரகத்திலிருந்து வாங்கி வந்துவிடவில்லை. உங்கள் வாழ்வில் உள்ள எல்லா பெண்களுக்கும் ஒரு ஜோடி இருக்கிறது. அவர்களுடைய டீசர்ட்டுக்குள் ஜூம் பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என கடுமையாக பதில் அளித்து இருக்கிறார்.

இப்படி இவர் பதில் அளித்தது குறித்து ஒரு பேட்டியில் கேட்ட பொழுது அந்த கேள்விக்கு நான் இப்படி பதில் கொடுத்தால் சர்ச்சை வெடிக்கும் அது பெரிய செய்தியாகும் என தெரிந்தேதான் நான் அதை செய்தேன். இதற்கு பயந்து கொண்டு நாம் விலகி விலகி சென்றால் பிறகு யார்தான் இதை பற்றி பேசுவது.,

இணைய பக்கங்களில் வந்து மோசமான கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக யார் பேசுவது, இது எல்லாவற்றையும் தாண்டி எனக்காக நானே பேசவில்லை என்றால் வேறு யார் பேசுவார்கள் என்கிற ஒரு கேள்வி இருக்கிறது என்று ஒரே போடாக போட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version