90களில் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமாக இருந்த நடிகைகளில் நடிகை ரம்பா முக்கியமானவர். தொடையழகி என்று அப்பொழுது பரவலாக அனைவராலும் அழைக்கப்பட்ட ரம்பா பல மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார்.
இவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். 1992 இல் முதன் முதலாக ஒரு தெலுங்கு சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்தில்தான் இவரது பெயர் ரம்பா என்று மாறியது. அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ரம்பா என்று இருந்தது.
அதனை தொடர்ந்து சினிமாவில் அவரது பெயர் ரம்பா என்று மாறியது. வெகு காலங்கள் தெலுங்கு சினிமாவில்தான் நடித்து வந்தார் ரம்பா. தற்சமயம் ரம்பா அவர்களின் வீட்டை விற்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
ரம்பா குறித்த செய்தி:
அவர் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் ரம்பா திடீரென கஷ்டத்திற்கு வர காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது இது குறித்து செய்யாறு பாலு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
1993ஆம் ஆண்டு வெளியான உழவன் என்கிற திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக ரம்பா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இதனை தொடர்ந்து ரம்பா ஒரு தோல்வி நடிகை என முத்திரை குத்தி அவரை ஓரம்கட்டி விட்டனர்.
அதற்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி அவருக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளத்தை அள்ளித்தா என்கிற திரைப்படத்தில் ரம்பா நடித்தார். மக்கள் ரசிக்கும் வகையிலான கவர்ச்சியில் அந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
தொடர்ந்து வாய்ப்பு:
அந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்ததோடு ரம்பாவின் மார்க்கெட்டையும் எக்கச்சக்கமாக உயர்த்தியது. அதனை தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், தர்மசக்கரம், அருணாச்சலம் மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்தார் ரம்பா.
தொடர்ந்து 19 முதல் 20 படங்களில் கமிட்டாகி நடித்து வந்து கொண்டிருந்தார் ரம்பா. இந்த நிலையில்தான் நாமே ஒரு திரைப்படத்தை தயாரித்தால் என்ன என்று ரம்பா நினைத்தார். அந்த வகையில் லைலா மற்றும் ஜோதிகாவையும் சேர்த்து த்ரீ ரோசஸ் என்கிற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தார் ரம்பா.
அந்த திரைப்படத்தை தயாரித்தது முதலே நிறைய பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டி இருந்தது. ஏனெனில் தமிழில் பிரபலமாக இருக்கும் இரண்டு நடிகைகளை அதில் நடிக்க வைக்கும் பொழுது அவர்களுக்குள் ஈகோ பிரச்சனை என்பது இருந்து கொண்டே இருந்தது.
இறுதியாக படத்தை முடித்து பார்க்கும் பொழுது அந்த திரைப்படம் படுதோல்வியை கண்டது. அது ரம்பாவிற்கு பெரிய கடனை ஏற்படுத்தியது அதற்குப் பிறகு தன்னிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து அந்த கடனை அடைத்தார் ரம்பா.
பிறகு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகிவிட்டார் அதற்கு பிறகு தமிழில் பெரிதாக நடிக்கவில்லை. இப்படி இருக்கும் பொழுது மீண்டும் ஏதும் பிரச்சினைகளுக்குள் சிக்கி கொண்டாரா என்று தெரியவில்லை ஆனால் இப்பொழுது அவர் எதனால் வீட்டை விற்கிறார் என்று தெரியவில்லை என்று இது குறித்து கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.