50 வயதிலும் கருப்பு நிற டாப்ஸ்.. பிங்க் நிற லெக்கின்ஸ்.. இளம் நடிகைகளை மிஞ்சும் ரோஜா..! வைரல் வீடியோ..!

1992 இல் வெளியான செம்பருத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதற்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோஜாவிற்கு செம்பருத்தி திரைப்படத்தில் தான் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கியிருந்தார். ஆர்.கே செல்வமணிக்கு இது மூன்றாவது திரைப்படம் ஆகும். அவரது முதல் திரைப்படம் புலன் விசாரணை என்கிற திரைப்படம். அது கொடுத்த வெற்றியை தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் என்கிற திரைப்படத்தை இயக்கினார் ஆர்.கே செல்வமணி.

கருப்பு நிற டாப்ஸ்

அதற்குப் பிறகு ஒரு காதல் கதையை படமாக்க வேண்டும் என்று செம்பருத்தி திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தை இயக்கும் போது ரோஜாவுக்கும் ஆர்.கே செல்வமணிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பிறகு ரோஜா ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார்.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார் ரோஜா. ரோஜா சினிமாவில் நடிப்பதற்கு இப்பொழுது வரை அவரது கணவர் செல்வமணி எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் ரோஜாவிற்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தது.

இளம் நடிகைகளை மிஞ்சும் ரோஜா

ரஜினியோடு சேர்ந்து உழைப்பாளி, வீரா போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரிக்க துவங்கியது. அந்த சமயத்தில் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார்.

நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு அவருக்கு உடல் எடை அதிகரிப்பதற்காக காரணத்தினால் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின. தொடர்ந்து அதற்கு பிறகு அரசியலில் ஆர்வம் காட்டத் துவங்கினார் ரோஜா.

வைரல் வீடியோ

தற்சமயம் ஒரு முக்கிய அரசியல் தலைவராக இருந்து வரும் சினேகா தெலுங்கிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1995 வரையில் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருந்த ரோஜா அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.

வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார் ரோஜா. இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் சினிமாவிற்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரோஜா. அந்த வகையில் உடல் எடையை குறைப்பதற்காக கடுமையான உடற்பயிற்சியில் இறங்கி இருக்கிறார்.

ஏனெனில் அதிக உடல் எடை காரணமாகதான் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. தற்சமயம் அவர் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார். அந்த வீடியோக்கள் அதிகமாக பிரபலமாக துவங்கியிருக்கின்றன. மீண்டும் ரோஜா தமிழ் சினிமாவிற்கு நடிக்க வருவாரா அல்லது தெலுங்கு சினிமாவிற்கு நடிக்க வருவாரா என்பது தான் இப்பொழுது பேச்சாக இருந்து வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version