நடிகைன்னா உனக்கு கிள்ளு கீரையாடா..? கொந்தளித்த நடிகை.. பிறகு நடந்தது..

தமிழ் சினிமாவில் நடிகைகள் குறித்த கிசுகிசுக்கள் என்பது எல்லா காலங்களிலுமே வந்து கொண்டுதான் இருக்கின்றன. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து நடிகைகளுக்குள் இருக்கும் அந்தரங்க உறவு குறித்து தொடர்ந்து நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அது இப்பொழுது மிகவும் அதிகமாகி விட்டது என்று கூறியுள்ளார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. இதனால் முந்தைய காலகட்டத்தில் நடிகை ஸ்ரீ பிரியா அதிக கோபத்திற்கு உள்ளானதாகவும் அவர் கூறுகிறார். முன்பு பத்திரிகைகளில் நடிகைகளை பற்றி எழுதியதை விடவும் இப்பொழுது ஆன்லைன் மீடியாக்கள் மிகவும் மோசமாக எழுதுகின்றன.

யூட்யூப் கொடுமைகள்:

வாய்க்கு வந்ததை எல்லாம் பலர் யூட்யூப்பில் பேசி வருகின்றனர் அதையெல்லாம் செய்தால் நடிகைகள் ஒன்றும் கேட்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்படித்தான் சமீபத்தில் காந்தராஜ் என்னும் சினிமா விமர்சகர் நடிகை மீனா குறித்து நிறைய தவறான வதந்திகளை பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும்போது மீனாவிற்கும் பிரபல அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேசியிருந்தார். அதை உண்மையான நிகழ்வு போலவே பேசி இருந்தார். அதெல்லாம் மிக தவறு நடிகைகளை பொறுத்த வரை அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை அவர்களது தனிப்பட்ட விஷயம், அவற்றையெல்லாம் இப்படி வெளிப்படையாக வீவ்ஸ்களை வாங்குவதற்காக பேசக்கூடாது என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

மீனாவை பொறுத்தவரை இதனால் கோபமடைந்து அதற்கு பதிலளித்திருந்தார். அதனால் கோபமடைந்த மீனா வதந்திகளை பரப்புபவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஸ்ரீ பிரியா கோபம்:

மேலும் அவர் கூறும்போது ஆனால் இப்பொழுது இருக்கும் நடிகைகள் யாரும் இவற்றை  எல்லாம் கண்டு கொள்வது கிடையாது. மேலும் இதற்கு எதிராக அவர்கள் ஏதும் பேசுவதும் கிடையாது. இதனால்தான் யூ ட்யூப் சேனல்களில் துவங்கி ஆன்லைன் மீடியாக்கள் வரை அனைவரும் அவர்களை குறித்து தவறாக பேசி வருகின்றனர்.

இதனால்தான் அப்பொழுதே ஸ்ரீ பிரியா இதற்கு கொதித்து எழுந்திருந்தார் பொதுவாகவே ஸ்ரீ பிரியா கொஞ்சம் கோபமான ஒரு நபர்தான் சினிமா பிரபலங்கள் மத்தியிலேயே யாராவது அவரிடம் அனாவசியமாக பேசிவிட்டால் அவர்களிடம் முகத்திற்கு நேராகவே பேசி விடக்கூடியவர் ஸ்ரீபிரியா.

அப்படி இருக்கும் பொழுது அவரை குறித்து பத்திரிகைகள் தொடர்ந்து தவறான கிசுகிசுக்களை எழுதி வந்தன. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான ஸ்ரீபிரியா அவர்களை கடுமையாக சாடி பேசியிருந்தார். அப்பொழுது அந்த விஷயம் அதிகமாக பேசப்பட்டு வந்தது. அதே மாதிரி இப்பொழுது இருக்கும் நடிகைகள் பேசாத காரணத்தினால்தான் அனைவரும் அவர்களை குறித்து இஷ்டத்திற்கு பேசுகின்றனர் என்று இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் செய்யாறு பாலு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version