தமிழில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவராக நடிகை நமீதா இருந்து வருகிறார். ஒரு காலத்தில் அதிகப்படியான வாய்ப்புகளை பெற்ற ஒரு நடிகையாக நமீதா இருந்து வந்தார்.
ஆனால் பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் எல்லாம் வெகு காலத்திற்கு பிரபலமாக இருக்க முடியாது. அதற்கு விதிவிலக்காக இருந்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான். அவருடைய காலகட்டங்களில் கவர்ச்சிக்கு இருந்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து அவர் அதிக வரவேற்பு பெற்று வந்தார்.
ஆனால் இப்போதைய காலகட்டத்தில் கவர்ச்சியை தாண்டி படத்தின் கதை நடிப்பு என்று நிறைய விஷயங்களை ரசிகர்கள் பார்க்க துவங்கி இருப்பதால் அந்த நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் இருக்க முடிவதில்லை. அந்த வகையில் சொந்தம் என்கிற ஒரு தெலுங்கு திரைப்படத்தில்தான் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு நமீதா அறிமுகமானார்.
நமீதாவிற்கு வந்த வரவேற்பு:
அவருக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைக்கவே தமிழில் முதன்முதலாக எங்கள் அண்ணா திரைப்படத்தில் கௌரி என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். எங்கள் அண்ணா திரைப்படம் ஒரு நல்ல கதைகளை கொண்ட திரைப்படம் என்பதாலும் அந்த திரைப்படத்தில் நமீதாவிற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்ததாலும் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.
இத்தனைக்கும் எங்கள் அண்ணா திரைப்படத்தில் பெரிதாக கவர்ச்சியாக நடித்திருக்க மாட்டார் நமீதா. இருந்தாலும் பிறகு ஏன் அவர் கவர்ச்சியான பாதையை தேர்ந்தெடுத்தார் என்பது பலருக்கும் கேள்வி குறியாகதான் இருக்கிறது.
அவர் நடித்த மகாநடிகன் ஏய், இங்கிலீஷ்காரன் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து கொஞ்சம் கவர்ச்சி காட்டத் தொடங்கினார் நமீதா. தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டம் முதலே அவருடன் அதிக திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தது நடிகர் சத்யராஜ் அவர்கள் தான்.
மார்க்கெட் குறைவு:
இந்த நிலையில் 2004 இல் தொடங்கி 2010 வரையிலுமே நிறைய திரைப்பட வாய்ப்புகளை பெற்றார் நமீதா. ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் நமீதாவின் நடிப்பில் இரண்டு திரைப்படங்களாவது தமிழில் வெளியாகி வந்தன.
2011க்கு பிறகு அவருடைய வாய்ப்புகள் குறைய தொடங்கின அதற்குப் பிறகு மிக மிக குறைவான திரைப்படங்களில் தான் நடித்து வந்தார் நமீதா இருந்தாலும் கூட அவர் கவர்ச்சி நடிகை என்கிற அவருடைய பெயர் மட்டும் மாறாமல் இருந்து வருகிறது.
அதற்கு ஏற்றவாறு அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இவ்வளவு வருடங்கள் கழித்தும் கூட கவர்ச்சி குறையாமல் அப்படியே இருக்கிறாரே நமீதா என்று அந்த புகைப்படங்களை பார்த்து ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.