நடிகைச சுனைனா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படத்திலிருந்தே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன.

இத்தனைக்கும் காதலில் விழுந்தேன் திரைப்படம் ஓரளவுக்குதான் வரவேற்பு பெற்றது. ஆனால் அந்த திரைப்படத்தில் 16 வயதே ஆன சுனைனா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த நடிப்புக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவருக்கு மாசிலாமணி திரைப்படத்திலும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த இரு திரைப்படங்களை தாண்டி அடுத்து வந்த திரைப்படங்களில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை சுனைனா.

நடிப்புக்கு கிடைத்த மதிப்பு:

அதில் முக்கியமான திரைப்படம் வம்சம் கிராமத்து பெண்ணாக அந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் சுனைனாவை நிஜமான கிராமத்து பெண் ஒருவர் தான் படத்தில் நடித்திருக்கிறார் என்று நினைக்கும் அளவிற்கு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதற்கு பிறகு அவர் நடித்த நீர் பறவை திரைப்படத்தில் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மீனவ பெண்ணாக நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அதையும் கூட மிக சிறப்பாக செய்திருந்தார். சுனைனா நடித்த இந்த திரைப்படங்களில் எல்லாமே படத்தின் முக்கிய கதாபாத்திரமாக சுனைனாவே இருந்தார்.

சீரிஸ்களில் வாய்ப்பு:

ஏதோ கதாநாயகி வந்து போக வேண்டும் என்று சாதாரண கதாபாத்திரங்களில் அவர் நடிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகும் கூட அவருக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின.

இதற்கு நடுவே தற்சமயம் ரத்த காட்டேரி ஆக ஒரு வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனால் அதுவும் தொடர்ந்து அடுத்த சீசன்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்சமயம் சுனைனாவிற்கு 35 வயதாகிறது ஆனால் இன்னமும் மற்ற பெரிய நடிகைகள் போலவே இவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் பலரும் இவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று பேட்டிகளிலும் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் தன்னுடைய காதலர் கையைப் பிடித்த வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுனைனா. இந்த நிலையில் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version