பாத்தாலே தூக்குதுங்க.. டார் டாராக கிழிந்த பேண்ட்.. குட்டி சுவற்றில் குத்த வைத்து தன்யா ரவிச்சந்திரன் நச் போஸ்..!

நெஞ்சுக்கு நீதி, கருப்பன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் கொஞ்சம் பரவலாகவே பிரபலமாக இருந்தவரும் நடிகையாக தன்யா ரவிச்சந்திரன் இருந்து வருகிறார்.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர் சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலேயே அதிக வரவேற்பை பெற்றார். ஆரம்பத்தில் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட தன்யா ரவிச்சந்திரன் தொடர்ந்து நடனம் தொடர்பான விழாக்களில் கலந்து கொண்டு வந்தார்.

தாமதமாகத்தான் அவருக்கு சினிமாவின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டு பலே வெள்ளைய தேவா என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் பிருந்தாவனம்.

தமிழில் எண்ட்ரி:

பிருந்தாவனம் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்தார் தன்யா ரவிச்சந்திரன். அந்த திரைப்படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வெளியான பொழுது பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

ஆனால் சின்னத்திரைக்கு வந்த பிறகு அந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது கருப்பன் திரைப்படம்தான்.  கருப்பன் திரைப்படத்தில் அன்பு செல்வி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உதயநிதியுடன் வாய்ப்பு:

அதற்கு பிறகு உதயநிதி கதாநாயகனாக நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எதுவும் கிடைக்கவில்லை படத்திலேயே பத்து நிமிடம் வரும் அளவில்தான் அவருடைய கதாபாத்திரம் அமைந்திருந்தது.

தொடர்ந்து ரசவாதி, அகிலன் என்று தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் தன்யா ரவிச்சந்திரன். ஆனால் அந்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறாததால் இவருக்கும் வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை.

இதற்கு நடுவே வெளியான பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார் ஆனாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக தன்யா ரவிச்சந்திரன் இருந்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி மாடர்ன் லுக்கில் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தன்யா ரவிச்சந்திரன் சமீபத்தில் ரசிக்கும் வகையிலான சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

தற்சமயம்  அவை இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version