ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. மாடர்ன் உடையில் மஜா பண்ணும் வாணி போஜன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் போலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து பிரபலமானவர்தான் நடிகை வாணி போஜன். வாணி போஜனை பொறுத்தவரை அவரது வாழ்க்கையில் நிறைய தடங்கல்களை சந்தித்து பிறகுதான் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

பொதுவாக மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள்தான் சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பை பெறுவார்கள். பெரும்பாலும் அவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் வாணி போஜனை பொறுத்தவரை அவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.

கல்லூரி முடித்தவுடன் பணி:

ஊட்டியில் இருக்கும் அரசு கல்லூரியில் படிப்பை முடித்த வாணி போஜன் தொடர்ந்து விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இண்டிகோ போன்ற முன்னணி விமான நிறுவனங்களில் இவர் பணிபுரிந்து வந்தார் இருந்தாலும் இவருக்கு மாடல் துறையில்தான் ஆர்வம் இருந்து வந்தது.

இந்த நிலையில் அதற்கும் முயற்சி செய்து வந்தார் வாணி போஜன். பிறகு சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் மாடலாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் வாணி போஜன் இதன் மூலமாக சில இயக்குனர்களின் கவனத்தை பெற துவங்கினார் வாணி போஜன்.

இந்த நிலையில் ஓர் இரவு என்கிற திகில் திரைப்படத்தில் முதன்முதலாக இவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு அதிகமாக வந்தது.

திரைத்துறையில் வாய்ப்பு:

அதன்பிறகு சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமான வாணி போஜன் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா விஜய் டிவியில் வெளிவந்த ஆகா ஆகிய நாடகங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் வாணி போஜனுக்கு சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் முக்கியமானதாக அமைந்தது.

அதில் அவருடைய கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது தெய்வமகள் சீரியல் மூலமாக தான் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் வாணி போஜன். இந்த நிலையில் ஓ மை கடவுளே என்னும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் வாணி போஜன்.

கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகி என்று சொல்லும் அளவிற்கு ஒரு கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவருக்கென தனி ரசிக்கப்பட்டாளம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version